HomeCinemaநான்காவது முறையாக இணைந்த அல்லு அர்ஜூன் _ இயக்குநர் திரிவிக்ரம் கூட்டணியில் மலரப்போகும் காவியக் கதை! 

நான்காவது முறையாக இணைந்த அல்லு அர்ஜூன் _ இயக்குநர் திரிவிக்ரம் கூட்டணியில் மலரப்போகும் காவியக் கதை! 

Published on

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் புகழ்பெற்ற இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் ஒரு அற்புதமான புராண காவிய கதைக்காக மீண்டும் இணைய இருக்கிறார்கள். இது அவர்கள் இணைந்து பணிபுரிய இருக்கும் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அல்லு அர்ஜூனுக்காகவே உருவாக்கப்பட்ட கதை இது என்பதால் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மிகுந்த உற்சாகத்தோடு இந்தப் படத்தை எதிர்பார்த்துள்ளனர்.

அல்லு அர்ஜுன் மற்றும் திரிவிக்ரம் ஆகியோர் கூட்டணி இதற்கு முன்பு பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளது. அவர்களின் முந்தைய படமான ‘அலா வைகுந்தபுரமுலூ’ தென்னிந்தியா முழுவதும் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட படமாக இருந்தது.

திரைத்துறையில் வெளியான தகவல்களின்படி, இந்தப் படம் இந்திய சினிமா இதுவரை பார்த்திராத அளவு பிரம்மாண்டமான புராண கதையாக ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. வலுவான கதைசொல்லல், பிரமாண்டமான காட்சிகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்திய மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு இதுவரை பார்த்த புராண படங்களை மறுவரையறை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 2027-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜூன் மற்றும் திரிவிக்ரம் கூட்டணி இந்திய சினிமாவில் புதிய மைல்கல்லை எட்டிப் பிடிக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this