HomeCinema‘அங்கம்மாள்’ படத்தின் முன்னோட்ட காட்சிகளில் கிடைத்த பெரியளவிலான வரவேற்பு... அதேபோல திரையரங்குகளிலும் வரவேற்பு கிடைக்கும் என...

‘அங்கம்மாள்’ படத்தின் முன்னோட்ட காட்சிகளில் கிடைத்த பெரியளவிலான வரவேற்பு… அதேபோல திரையரங்குகளிலும் வரவேற்பு கிடைக்கும் என தயாரிப்பாளர்கள் நம்பிக்கை

Published on

கீதா கைலாசம் நடிப்பில் வரும் டிசம்பர் 5 அன்று வெளியாகவிருக்கும் ‘அங்கம்மாள்’ திரைப்படத்தின் பிரிவியூ ஷோ சமீபத்தில் திரையிடப்பட்ட நிலையில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நேர்மறையான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அதன் காரணமாக படம் 90-க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகிறது. இந்தப் பெருமைமிகு தருணத்தைப் பற்றி தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன், “’அங்கம்மாள்’ திரைப்படத்தை முதல் நாளில் இருந்தே நாங்கள் நம்பினோம். சொல்ல வந்த விஷயத்தை ‘அங்கம்மாள்’ மென்மையாகப் பேசினாலும் நீண்ட காலத்திற்கு இந்தக் கதை பற்றி பார்வையாளர்கள் பேசுவார்கள். கதையின் நேர்மையை புரிந்து கொண்டு பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வதைப் பார்ப்பது மிகவும் நிறைவாக இருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவும், குறிப்பாக கீதா கைலாசம் மற்றும் சரண் சக்தி இருவரும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ’அங்கம்மாள்’ திரைப்படத்தின் மீது நாங்கள் வைத்த நம்பிக்கை இப்போது அதிகரித்திருக்கும் திரையரங்குகள் எண்ணிக்கையிலும் பிரதிபலித்திருக்கிறது. நேர்மையான கதைகள் பார்வையாளர்களை சென்றடையும் என்பதற்கு ‘அங்கம்மாள்’ திரைப்படம் சமீபத்திய உதாரணம். இந்த அற்புதமான படைப்பினை கொடுத்த இயக்குநர் விபினுக்கு நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் ஃபிரோஸ் ரஹிம், “இந்தப் படம் தாய்மை, கண்ணியம் மற்றும் சாதாரண பெண்களின் அமைதியான வீரத்தை கொண்டாடுகிறது. இதுபோன்ற கதைகள் அரிதாகவே சொல்லப்படும். சிங்க்-சவுண்ட் பதிவு மற்றும் ஒளிப்பதிவு படக்குழுவினருக்கு சவாலான விஷயம் என்பதை மறுக்க முடியாது. அந்த சவாலை ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஆர்வத்துடன் எடுத்து செய்தனர். பிரீமியர் ஷோவில் கிடைத்த பாராட்டுகள் எங்களின் உழைப்பை பெருமைப்படுத்தியது. இந்தத் தருணத்தில், படப்பிடிப்பின் போது எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்த ஒட்டுமொத்த கிராமத்தினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் ‘அங்கம்மாள்’ இல்லை” என்றார்.

தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான அஞ்சாய் சாமுவேல் கூறுகையில், “உணர்வுகளும் கலையும் ஒருசேர பயணிக்கும்போது சினிமா அர்த்தமுள்ளதாகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் ’அங்கம்மாள்’ திரைப்படம். பெரும்பாலும் காட்சிகள் மூலம் கதை சொல்லப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஒவ்வொரு நடிகரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்துள்ளனர். பிரிமீயர் ஷோவில் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒட்டுமொத்த குழுவினரின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறேன். இந்தக் கதை மீது நாங்கள் என்ன நம்பிக்கை வைத்தோமோ பார்வையாளர்களும் அதே நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி” என்றார்.

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this