HomeCinemaதமிழில் ஏ பி நாகராஜ் போல படம் எடுக்க ஆளில்லை என்ற ஏக்கத்தை போக்க வந்திருக்கிறார்...

தமிழில் ஏ பி நாகராஜ் போல படம் எடுக்க ஆளில்லை என்ற ஏக்கத்தை போக்க வந்திருக்கிறார் இயக்குநர் போயபாடி ஶ்ரீனு! -சென்னையில் நடந்த அகண்டா 2 – தாண்டவம்’ படத்தின் பிரஸ் மீட்டில் நடிகர் ஒய் ஜி மகேந்திரன் பேச்சு 

Published on

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்துள்ள அகண்டா 2 – தாண்டவம் திரைப்படம் தெலுங்கு பதிப்பும் தமிழ் பதிப்பும் வரும் டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் பதிப்பின் வெளியீட்டையொட்டி படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிகை ஊடகத்தினரைச் சந்தித்தனர்.

நிகழ்வில் பேசிய பாலகிருஷ்ணா ”என் சொந்த வீட்டுக்கு வந்தது போல உள்ளது. நான் இங்கு தான் பிறந்தேன். அகண்டா 2 விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். என் உயிருக்கு இணையான தமிழ் நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் நன்றிகள். சென்னை என் ஜென்ம பூமி, ஆந்திரா ஆத்ம பூமி. என் அப்பா என் டி ஆரின் வாழ்க்கையெல்லாம் இங்கு தான் நடந்தது. மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜியுடன் என் அப்பாவின் நட்பை, அன்பை மறக்க முடியாது.

என் அப்பா என் டி ஆர் தமிழ் நாட்டின் மீது மிகுந்த அன்போடு இருந்தார். அகண்டா முதல் பாகம் வெளிவந்த போது இப்படம் பார்க்க ஆள் வருமா? என நினைத்தோம். ஆனால் இம்மாதிரி படம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக தர வேண்டும் என உருவாக்கினோம். அது சூப்பர் ஹிட்டானது. இம்மாதிரி படங்களை ரசிகர்கள் பார்க்கிறார்கள் என தைரியம் வந்தது, போயபாடி ஶ்ரீனுவுடன் எனக்கு நாலாவது படம். எல்லாமே சூப்பர் ஹிட்.

அவருடன் கதை கூட அவ்வளவாக விவாதிக்க மாட்டேன். இந்தப்படம் 130 நாட்களில் முடிந்து விட்டது. இது சீக்குவல் இல்லை, இது இந்து தர்மத்தை, கலாச்சாரத்தை போற்றும் ஒரு படைப்பு. நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி. நம் பண்பாடுகளை, சனாதான தர்மத்தை இந்த தலைமுறை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு இந்தப்படம். சனாதான தர்மத்தை சக்தியை இந்தப்படத்தில் காட்டியுள்ளோம்.

தர்மத்திற்காக நாம் போராட வேண்டும். என் அப்பா தான் என் தெய்வம் அவர் எல்லா வகையிலும் படம் செய்துவிட்டார், நான் ரொம்ப அதிர்ஷடசாலி. நான் திரைக்கு வந்து 50 வருடமாகிவிட்டது. அவர்கள் ஆசியில் இன்னும் ஹீரோவாக நடிக்கிறேன். 4 படம் தொடர் வெற்றி. ரசிகர்கள் இம்மாதிரி படங்களுக்கு காத்திருக்கிறார்கள். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். படம் டிசம்பர் 5-ம் தேதி வருகிறது அனைவரும் படம் பாருங்கள். கொண்டாடுங்கள்” என்றார்.

போயபாடி ஶ்ரீனு ”அனைவருக்கும் வணக்கம். அகண்டா தெலுங்கு மொழிக்கான படமல்ல; அதே போல தான், அகண்டா 2. இது இந்துகள் மற்றும் இந்தியாவின் ஆன்மாவை, ஆன்மிகத்தை கொண்டாடும் படம். தெலுங்கு, தமிழ், என எல்லோருக்குமான படம். பாரதம் முழுக்க உள்ள அனைவரும் இப்படத்தை கொண்டாடுவார்கள். படத்தை கண்டிப்பாக அனைவரும் ரசிப்பீர்கள். தேகம், தேசம், தெய்வம் என எல்லாவற்றிக்குமான படம். அதை கமர்ஷியலாக தந்துள்ளோம்” என்றார்.

நடிகர் ஒய் ஜி மகேந்திரன், படம் முழுக்க முழுக்க கூஸ்பம்ஸ் அனுபவம் தான். என் டி ஆர் உடன் நடிக்க வேண்டும் என நிறைய ஆசைப்பட்டேன், ஆனால் இறைவன் காத்திரு கடவுளுடன் நடிக்கலாம் என சொன்னார். அது இப்போது நடந்துள்ளது. இப்படத்தில் ஒரு துறவியாக நடித்துள்ளேன். எனக்கு இயக்குநர் போயபாடி சீனு ஒரு அற்புதமான ரோல் தந்துள்ளார். தமிழில் ஏ பி நாகராஜ் போல படம் எடுக்க ஆளில்லை என்ற ஏக்கத்தை போக்க வந்திருக்கிறார் இயக்குநர் போயபாடி ஶ்ரீனு. மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இவர் கொண்டாடப்படுவார்.

பாலைய்யா ஒரு நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு சக்தி, அவர் மாதிரி இப்போது எந்த ஒரு நடிகரும் இயங்க முடியாது. மைனஸ் 10 டிகிரியில் வெறும் உடலுடன் எந்த சீஜியும் இல்லாமல், ஜார்ஜியாவில் நடித்தார்.

இப்படம் எனக்கு மிகச்சிறந்த அனுபவம். 300 படங்கள் நடித்துள்ளேன், நான் அகண்டா படமும் செய்துள்ளேன் Both are not same. இப்படம் மொழி தாண்டிய ஒரு பான் இந்திய திரைப்படம், நம் இந்திய கலாச்சாரத்தை கொண்டாடும் படைப்பு. நீங்கள் படம் பார்த்து கொண்டாடுவீர்கள், அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்.

நம் ஆன்மீக உணர்வை யார் வந்து, என்ன சொன்னாலும் அழிக்க முடியாது. இது ஒரு பக்கா கமர்ஷியல் படம். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். இப்படம் எனக்கு மிகப்பெரும் பெருமை” என்றார்.

படத்தின் இணை தயாரிப்பாளர் கோடி பருச்சுரி, நடிகை விஜி சந்திரசேகர் உள்ளிடோரும் நிகழ்வில் பேசினார்கள்.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...