HomeCinemaவன்முறையில்லாமல் வடசென்னை பின்னணியில் வாழ்வியல் படைப்பாக உருவான 'ஆல் பாஸ்.'

வன்முறையில்லாமல் வடசென்னை பின்னணியில் வாழ்வியல் படைப்பாக உருவான ‘ஆல் பாஸ்.’

Published on

வடசென்னை பின்னணியில் வன்முறையில்லாமல் வாழ்வியலைச் சொல்லும் படம் ‘ஆல் பாஸ்’ !

அடிதடி, வெட்டு, குத்து, அருவா – சண்டை இல்லாத வடசென்னை மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படம் ‘ஆல் பாஸ் ‘( ALL PASS )

வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் விதத்தில்
“ஆல் பாஸ் ” (ALL PASS ) என்றொரு படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தை மைதீன் இயக்குகிறார்.

ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் ( One Step Entertainment ) என்கிற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா .ஆர் தயாரித்து வருகிறார்.

‘ நிறங்கள் மூன்று’, ‘தருணம்’, போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.

பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி ‘லியோ’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா,ஆர், சத்யா மற்றும்
மாஸ்டர் ஸ்பைடர் சஞ்ஜெய், கோகுல், நிகில் மூவரும் பெயர் சொல்லும் பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

‘ பாண்டியநாடு’, ‘எதிர்நீச்சல்’ போன்ற படங்களின் மூலம் பிரபலமான சரத் லோகித்ஷவா இந்தப் படத்தின் வில்லனாக நடிக்க, ‘பாபநாசம்’ படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர், ‘பைசன்’ படத்தில் பி.டி வாத்தியாராக நடித்த அருவி மதன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இயக்குநர் மூர்த்தி , கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் நகைச்சுவைப் பாத்திரங்களில் வருகிறார்கள்.

‘கலகத் தலைவன்’, ‘அண்ணாதுரை’ , ‘தகராறு’ போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் தில்ராஜு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் .

பிரபல பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்வரிகளை எழுதியுள்ளார்.

‘பசங்க’ படத்தின் படத்தொகுப்பாளர் எஸ்.பாஸ்கர் இந்தப் படத்திற்கும் எடிட்டிங் செய்துள்ளார். கலை இயக்குநராக ஜெயசீலன்.T பணியாற்றியுள்ளார்.

பிரபல நடன இயக்குநர் ராதிகா நடனம் அமைத்துள்ளார். சண்டைக் காட்சிகளை மெட்ரோ மகேஷ் அமைத்துள்ளார்.

ஒப்பனை – எல்.வி.ராஜா,
உடைகள் – ஏ.எஸ்..வாசன்,
ஸ்டில்ஸ் – அண்ணாதுரை,
விளம்பர வடிவமைப்பு – கிப்சன் UGA,
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்,
தயாரிப்பு – மோகனா. ஆர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் மைதீன்.

படம் பற்றி இயக்குநர் மைதீன் பேசும்போது,

” இந்தத் திரைப்படம் ஃபேமிலி சென்டிமெண்ட் கலந்த கதை கொண்டது.
வடசென்னை என்றாலே இதுவரைக்கும் அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம் பகை கொலை என்றே தமிழ் சினிமாவில் காட்டி வந்திருக்கிறார்கள். முதல்முறையாக இது எதுவுமே இல்லாத வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்.

அப்படி பகை வன்முறை இல்லாத வடசென்னையில் வாழும் மூன்று குடும்பங்கள் அன்பு, பாசம், நட்பு, சந்தோஷம், துக்கம் என்று பகிர்ந்து கொண்டு வாழ்க்கையை அவர்களது போக்கில் வாழ்கிறார்கள். ஆனால் இயற்கை அவர்களுக்கு ஒரு சோதனை வைக்கிறது. அது என்ன சோதனை?அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே இந்தப் படத்தின் திரைக்கதை.

குடும்ப உணர்வுகளை சினிமாவில் சொல்லிய அனைத்து படங்களும் பெரிய வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்த ‘ஆல் பாஸ்’ படமும் இருக்கும் “என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் மைதீன்.

படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் மற்றும் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருவரும் தங்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர். போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே பார்வையாளர்களிடம் கவனம் பெற்று, பார்வைகளை அள்ளி வருகிறது.

Latest articles

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

மனதுக்கு இதம் தரும் ‘வானே வானே…’ துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=5r7Q5jS2gas பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான்-  அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் தனது 41வது திரைப்படத்தின்...

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா, வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்களும் இதில் உண்டு....

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

More like this