HomeCinema5000 அடி உயரத்தில் ஒரு காட்சி; பாலிவுட் குழு உதவியுடன் ரியல் ஸ்டண்ட்ஸ்... மூன்று காலகட்டங்களில்...

5000 அடி உயரத்தில் ஒரு காட்சி; பாலிவுட் குழு உதவியுடன் ரியல் ஸ்டண்ட்ஸ்… மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ‘அமரம்’ படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் புது அனுபவம்!

Published on

ராஜன் தேஜேஸ்வர், ஐரா அகர்வால் நடிக்கும் படம் ‘அமரம்.’

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் அருள் கிருஷ்ணன். இவர் இயக்குநர் கோகுல், ராஜன் மாதவ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”இப்படம் மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர காதல் கதை.

இதுவரை திரையில் பார்த்திராத அதிரடி காட்சிகளுடன் முழுக்க முழுக்க ஆக்சன் விருந்தாக இந்த திரைப்படம் இருக்கும். மிராக்கிள் மைக்கேல் புதுவிதமான பாணியில் ஸ்டண்டை வடிவமைத்துள்ளார்.

கிளைமேக்ஸ் காட்சியில் பிரபல பாலிவுட் குழு உதவியுடன், முழுக்க ரியல் ஸ்டண்ட்ஸ் செய்திருக்கிறோம். தெலுங்கு சூப்பர் ஹிட் இசையமைப்பாளர் மிக்கி J மேயர் இப்படம் மூலம், தமிழுக்கு முதன்முறையாக அறிமுகமாகிறார். 4 பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இருக்கும். 5000 அடி உயரத்தில் ஒரு காட்சியை படமாக்கியுள்ளோம். இப்படி இப்படத்திற்காக ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறோம். இப்படம் இதுவரை சொல்லப்படாத கிழக்கு காடு மக்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக இருக்கும். இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் புது அனுபவமாக இருக்கும்” என்றார்.

படத்தில் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர்.

பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் மிக்கி ஜெ. மேயர் இசையமைத்துள்ளார்.

வெற்றிமாறனின் வட சென்னை, அசுரன் படங்களில் பணியாற்றிய  ஆர் ஸ்ரீராமர் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பார்வையை இயக்குநரும், நடிகருமான சசிகுமார் எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். தற்போது அது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Latest articles

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்கள் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது! -‘அன்பே டயானா’ பட விழாவில் இயக்குநர் பாரி இளவழகன் 

ஜமா பட இயக்குநர் பாரி இளவழகன் நடித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் மற்றும்...

I, Nobody சினிமா விமர்சனம்

'கெட்டியோலானு என்டே மாலாக்கா', 'ரோஷாக்' ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கியுள்ள படம். வங்கி கொள்ளை என்ற...

புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிரம்பிய துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது…...

More like this