HomeCinemaஇசைஞானி இளையராஜாவுக்கு பொன்விழா எடுத்த தமிழக முதல்வருக்கு கோடான கோடி நன்றிகள்! நடிகர் அப்புக்குட்டி அறிக்கை

இசைஞானி இளையராஜாவுக்கு பொன்விழா எடுத்த தமிழக முதல்வருக்கு கோடான கோடி நன்றிகள்! நடிகர் அப்புக்குட்டி அறிக்கை

Published on

நடிகர் அப்புகுட்டி, ‘இசைஞானி இளையராஜாவுக்கு பொன்விழா எடுத்த தமிழக முதல்வருக்கு, கோடான கோடி நன்றிகள்‘ என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இளையராஜா இசையில் சுசீந்திரன் இயக்கிய ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் முதல் முதலாக கதையின் நாயகனாக நடித்த அப்புக்குட்டி ‘தேசிய விருது’ பெற்றது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவுக்கு தமிழக அரசு நடத்திய பொன்விழா நிகழ்வு பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

நான் பெற்ற தேசிய விருதுக்கு இளையராஜா அவர்கள் மிக முக்கிய காரணம். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் ஒரு கேரக்டர் செய்திருந்த என்னை, கதையின் நாயகனாக ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தின் மூலம் மாற்றியவர் சுசீந்திரன் அவர்கள். அந்தப் படத்தில் ‘குதிக்கிற குதிக்கிற குதிரை குட்டி என் மனச காட்டுதே… என்ற பாடலை இளையராஜா அவர்கள் எனக்காக இசையமைத்து, பாடிய அந்தப் பாடலை, படத்தில் வாய் அசைத்து நடித்த எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. மேலும் அந்தப் படத்தின் எமோஷனலான காட்சிகளில் நான் நடிக்கும் போது, அதற்கு இளையராஜா அவர்கள் அமைத்திருந்த பின்னணி இசை டெல்லி வரை கேட்டு, ‘எனக்கு தேசிய விருதை பெற்று தந்தது.’

இளையராஜா நம் தமிழகத்தின் பொக்கிஷம். அவர் வாழும் காலத்தில் அவர் இருக்கும் திரை துறையில் நாம் பயணிப்பது பெரும் பாக்கியம். ஒவ்வொரு நடிகர்களுக்கும் இளையராஜா இசையில் நடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்த கனவு எனக்கு நிறைவேறி, அதன் மூலம் தேசிய விருதும் கிடைத்தது. இந்த எல்லா பெருமையும் இளையராஜாவையே சாரும்.

கலைஞர்களுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்தாலும், அரசு விழா எடுப்பது என்பது மிகப் பெரிய பெருமையாகும். இளையராஜாவிற்கு பொன்விழா எடுத்த தமிழக முதல்வர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this