HomeCinemaசினிமா, ஓடிடி எதுவானாலும் மாஸாக நடிப்பதைவிட அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்கவே விருப்பம்! -விரிவாகப் பேசுகிறார் 'பிக்பாஸ்''...

சினிமா, ஓடிடி எதுவானாலும் மாஸாக நடிப்பதைவிட அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்கவே விருப்பம்! -விரிவாகப் பேசுகிறார் ‘பிக்பாஸ்” அர்ச்சனா 

Published on

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை அர்ச்சனா தற்போது சினிமா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் துறையிலும் தனது பயணத்தைத் தொடங்க ஆர்வமாக உள்ளார். சினிமாவில் என்ன சாதிக்க வேண்டும் என்ற தெளிவான இலக்கு மற்றும் நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

பிக்பாஸ் அனுபவம் குறித்து பேசிய அவர், “பிக்பாஸ் நிகழ்ச்சி எனக்கு அடையாளம் மட்டும் கொடுக்கவில்லை. என்னுடைய முகமூடி இல்லாத அசல் முகத்தையும் பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்த்தது. இந்த விஷயம் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்னும் எனக்கு நெருக்கமானதாக மாற்றியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரு விஷயம் நான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது அமைதி. நான் அதிகம் பேசக்கூடிய நபர். ஆனால், இப்போது எங்கே பேச வேண்டும் எங்கு அமைதியாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். இது என்னுடைய புதிய வெர்ஷனை எனக்கே அறிமுகப்படுத்தியது” என்றார்.

தற்போது திரை நட்சத்திரமாக ஒளிரும் பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா “நான் IT-யில் சேர்ந்திருக்கலாம் அல்லது UPSC-க்கு தயாராகி இருக்கலாம். ஏனெனில், என் அப்பா என்னை எப்போதும் ஒரு IAS அதிகாரியாக பார்க்க வேண்டும் என்று கனவு கண்டார்” என்றார் புன்னகையுடன்.

தற்போது முழு கவனமும் நடிப்பில் இருப்பதால் எந்த மாதிரியான கதாபாத்திரம் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பது பற்றியும் பகிர்ந்து கொண்டார், “வழக்கமான கதாபாத்திரங்கள் ஏற்று நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. வலுவான, பல அடுக்குகள் கொண்ட, எமோஷனலான பெண் கதாபாத்திரங்களைத் திரையில் கொண்டு வரவே விருப்பம்.

கதை நன்றாக இருந்தால் சினிமா, ஓடிடி இரண்டிலும் நடிப்பேன். மாஸாக நடிப்பதை விட அர்த்தமுள்ள அதே சமயம் பார்வையாளர்களுடன் கனெக்ட் செய்யும்படியான கதாபாத்திரங்களில் நடிக்கவே விருப்பம்” என்றார்.

இந்திய சினிமா மீதான காதல் பற்றி கேட்டபோது, “சீனியர் நடிகர்கள் ஷபானா அஸ்மி, ஸ்மிதா படில், அர்ச்சனா, ஷோபனா மற்றும் நந்திதா தாஸ் இவர்கள் எல்லாம் பிடிக்கும். கதாநாயகிகளாக அவர்கள் முத்திரை பதித்துள்ளனர். அதுபோல என் பணியிலும் நான் முத்திரை பதிக்க விரும்புகிறேன்.

டீனேஜ் கதாநாயகிகளைப் போலவே கதையின் நாயகியாக எந்த வயதிலும் நடிக்கலாம் என்பதைப் பலரும் இப்போது நிரூபித்து வருகின்றனர். அதனால், என்னுடைய பெஸ்ட் கொடுப்பேன்.

புதுமையான கதாபாத்திரம் அதற்கான அங்கீகாரம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதற்கான விஷயங்கள் நிச்சயம் செய்வேன்” என்றார்.

நிதானமாக, தெளிவுடன் தனது சினிமா கனவு நோக்கி நகரும் அர்ச்சனா நடிக்கும் படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடிப்பது உறுதி.

Latest articles

கார்த்திகை தீபத் திருநாளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த ‘அறுவடை’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ்!

‘லாரா’ திரைப்படத்தைத் தயாரித்து, நடித்தவர் மு. கார்த்திகேசன். தொடர்ந்து தனது எம். கே. பிலிம் மீடியா ஒர்க்ஸ் பி.லிட் ...

ஸ்ருதிஹாசன் நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும், தரமான படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது அடுத்த...

மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் வெளியீடு!

டாக்டர் டூமுக்கு எதிராக ஒன்றிணையும் அவெஞ்சர்ஸ், எக்ஸ்-மென், ஃபென்டாஸ்டிக் ஃபோர் மற்றும் தண்டர்போல்ட்ஸ் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற...

பிரேம் குமார் – ஃபஹத் ஃபாசில் கூட்டணியின் ‘அசரீரி’ புத்தாண்டு வெளியீடாக திரைக்கு வருகிறது!  

‘96’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த இயக்குநர் பிரேம் குமார், தொடர்ந்து...

More like this