HomeUncategorizedசோஷியல் மீடியாவின் நெகட்டிவான பக்கங்கள் பற்றி இந்த படம் பேசுகிறது; நான் ‘கேர்ள் நெக்ஸ்ட் டோர்’...

சோஷியல் மீடியாவின் நெகட்டிவான பக்கங்கள் பற்றி இந்த படம் பேசுகிறது; நான் ‘கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்! -சாரி பட நிகழ்வில் நடிகை ஆராத்யா தேவி பேச்சு

Published on

இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில், கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி.’

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4, 2025 அன்று ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் ராம் கோபால் வர்மா, “ஒவ்வொரு படத்திற்கு ஒரு மையக்கரு உள்ளது. ‘சாரி’ படத்தின் கரு சோஷியல் மீடியாவின் தாக்கம் உறவுகளில் எப்படி இருக்கிறது என்பதுதான். சில நேரங்களில் கெட்ட விஷயங்கள் நடந்து அது உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தலாம். ஆராத்யா கதாபாத்திரம் போல பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதைத்தான் ‘சாரி’ திரைப்படம் பேசுகிறது” என்றார்.

நடிகை ஆராத்யா தேவி, “நான் கேரளா பொண்ணு. ‘சாரி’ படத்தின் டிரெய்லர், பாடல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். ‘கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ கதாபாத்திரத்தில்தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். சோஷியல் மீடியாவின் நெகட்டிவ் மற்றும் இருட்டு பக்கங்களை இந்தப் படம் பேசுகிறது. நிச்சயம் பெண்கள் இதை தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். ஆராத்யா என்ற கதாபாத்திரத்தில் எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ராமுக்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை” என்றார்.

நடிகர் சத்யா யாது, “நான் உத்ரபிரதசேத்தை சேர்ந்தவன். ‘சாரி’ படம்தான் எனக்கு அறிமுகப் படம். இதற்கு முன்பு சில சீரியல்களில் நடித்திருக்கிறேன். ‘சாரி’ திரைப்படம் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். சோஷியல் மீடியா ஸ்டாக்கிங் பற்றி படம் பேசுகிறது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இந்தப் படத்தை தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ளலாம்” என்றார்.

தயாரிப்பாளர் ரவி ஷங்கர் வர்மா, “ராம் கோபால் வர்மா சாருடன் எனக்கு இது முதல் படம். நல்ல படங்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம்” என்றார்.

கேரள விநியோகஸ்தர் ஷானு, “உலகம் முழுவதும் இந்தப் படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இப்போது சோஷியல் மீடியாவில் என்ன நடக்கிறது என்பதை அப்படியே இந்தப் படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு ஜாபர் ஸ்டுடியோஸ் வினோத் அவர்களை படம் பார்க்க அழைத்தேன். படம் பிடித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் விநியோகிக்க கேட்டுக் கொண்டோம். 100 செண்ட்ருக்கும் மேலாக தமிழகத்தில் நானே ரிலீஸ் செய்கிறேன் என சொன்னார். படத்தை புரமோட் செய்யுங்கள்” என்றார்.

தமிழ்நாடு விநியோகஸ்தர் வினோத், “இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ரசிகன் நான். ‘சாரி’ படம் பார்த்துவிட்டு மிகவும் பிடித்திருந்தது. தமிழகத்தில் படத்தை நானே ரிலீஸ் செய்ய ஒத்துக் கொண்டேன். விநியோகஸ்தராக இது என்னுடைய முதல் படம். உங்கள் ஆதரவு தேவை” என்றார்.

Latest articles

திரைத்துறையில் புதிய திறமைகளை அடையாளப்படுத்தியது போலவே, எழுத்துலகிலும் ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்க ‘மில்லியன் டாலர் பப்ளிகேஷன்’ தொடக்கம்!

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் & பப்ளிகேஷன் நிறுவனர் யுவராஜ் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:- வணக்கம், திரைத்துறையில் புதிய திறமைகளை...

போதைப்பொருள் சீரழிவை மையப்படுத்தி, ‘அப்பா வேணாம்ப்பா’ இயக்குநர் இயக்கிய ‘முதற்கனல்’ மே மாதம் வெளியாகிறது!

ஸ்ரீகெங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.போத்திராஜ் DFT தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘முதற்கனல்’. ‘அப்பா ..வேணாம்ப்பா’, ‘அதையும் தாண்டி புனிதமானது’ போன்ற...

விஜய் மில்டனின் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படத்தின் ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

https://www.youtube.com/watch?v=b-5O5p4oEng தமிழ்–தெலுங்கு இருமொழி படமாக உருவாகும் Gods and Soldiers திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “ட்ரைசர்” (Trailer + Teaser)-ஐ...

ஜி.வி.பிரகாஷின் பதிய படத்தை ‘ஜோ’ பட இயக்குநர் இயக்க நாயகியாகிறார் ஜோ பட நாயகி மாளவிகா மனோஜ்!

ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து இசையமைக்கவுள்ள புதிய படத்தை லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. ‘கருடன்’...

More like this