HomeCinemaரஞ்சித், மாரி செல்வராஜ், அடுத்ததாக ராஜாஜி. நவம்பர் 17-ல் ரிலீஸாகும் ‘அம்புநாடு ஒம்பது குப்பம்'...

ரஞ்சித், மாரி செல்வராஜ், அடுத்ததாக ராஜாஜி. நவம்பர் 17-ல் ரிலீஸாகும் ‘அம்புநாடு ஒம்பது குப்பம்’ படத்தில் பரபரப்பு சம்பவங்கள்!

Published on

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக உருவாகியுள்ள ‘அம்புநாடு ஒம்பது குப்பம்’ என்ற படம் நவம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள, பல சமூக மக்கள் வாழ்கிற பின்தங்கிய கிராமம் அது. அங்கே ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிற, சக மனிதனை ஜாதியின் பெயரால் ஒதுக்கி வைக்கிற, அதற்காக எந்த எல்லைக்கும் போகிற, அதன் வழியாக ஊரை ஆள வேண்டும் என்கிற வெறியோடு இரு தரப்பு பண்ணையார்கள்…

அந்த ஊரில் கோவில் திருவிழா வருகிறது. திருவிழாவில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் கோவில் பூசாரி வைத்திருந்த தாம்பூலத்தட்டை தொட்டு விபூதி எடுத்து விடுகிறார். அதனால் கலவரம் ஏற்படுகிறது, பண்ணையார்கள் தங்களுக்குள் இருக்கும் அதிகார பகையை ஒதுக்கிவைத்து விட்டு இணைகிறார்கள். ‘தாம்பூலத் தட்டை தொட்டது தீட்டாகிவிட்டது’ என்று சொல்லி நாட்டு கூட்டம் நடத்த திட்டமிடுகிறார்கள்.

அதே பகுதியில், ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக விடுதலைக்காக போராடக்கூடிய அரசியல் இயக்கம் ‘நாட்டு கூட்டத்திற்கு போகக்கூடாது, சட்டப்படி பிரச்சனையை எதிர்கொள்வோம்’ என்று சொல்லி பட்டியல் சமூக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

அதை தெரிந்துகொண்ட பண்ணையார்கள், இயக்கத்தினரிடம் தாங்கள் தோற்றுவிட்டால், தங்களது ஜாதி கௌரவத்திற்கு இழிவு ஏற்பட்டுவிடும் என்று கருதி தாம்பூலத் தட்டை தொட்ட இளைஞரை கொலை செய்து விடுகிறார்கள். அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சி தரும்படி, பரபரப்பாக இருக்கும்படி திரைக்கதை அமைத்துள்ளார் படத்தின் இயக்குநர் ஜி.ராஜாஜி.

படத்தில் இடம்பெற்றுள்ள கருத்தாழமிக்க பாடல்களுக்கு பிரபல பாடகர் அந்தோணி தாசன் இசையமைத்துள்ளார். ஜேம்ஸ் வசந்தன் பின்னணி இசையமைத்துள்ளார்.

படக்குழு:-
தயாரிப்பு: பூபதி கார்த்திகேயன்
மூலக்கதை: துரை குணா
எழுத்து, இயக்கம்: ஜி.ராஜாஜி
ஒளிப்பதிவு: மகேஷ்
பாடல்களுக்கு இசை: அந்தோணி தாசன்
பின்னணி இசை: ஜேம்ஸ் வசந்தன்
எடிட்டிங்: பன்னீர் செல்வம்
பாடல்கள்: லா வரதன், கடல் வேந்தன்
நடனம்: ராதிகா
சண்டைப் பயிற்சி: குங்பூ குணா
மக்கள் தொடர்பு: விஎம் ஆறுமுகம், ராஜ்குமார்

Latest articles

‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் – ஏழு தசாப்த பாரம்பரியத்திற்கு மேலும் ஒரு மகுடம்!

இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சத்யஜோதி...

கடைசி 30 நிமிடம் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் படம்! -அன்பில் அவன் படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் ஆர்.கார்த்திகேயன்

அசோக் செல்வன் நடித்துள்ள ‘அன்பில் அவன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் படத்தின் நாயகன்...

வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’  டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

https://www.youtube.com/watch?v=8e_1-E8cw-s இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர்...

‘அன்பில் அவன்’ திரைப்படம் அக்டோபர் 2-ல் ரிலீஸ்!

பட வெளியீடு சம்பந்தமாக அன்பில் அவன் படக்குழு விடுத்துள்ள அறிக்கையிலிருந்து... ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர...

More like this