HomeCinemaபரபரக்கும் திரைக்கதையில் புதுமையான இன்வஸ்டிகேசன் திரில்லராக உருவான 'அறிவான்' படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட...

பரபரக்கும் திரைக்கதையில் புதுமையான இன்வஸ்டிகேசன் திரில்லராக உருவான ‘அறிவான்’ படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட திரைப் பிரபலங்கள்!

Published on

ஆனந்த் நாக், ஜனனி நடிப்பில், மர்டர் மிஸ்டரி திரில்லராக அருண் பிரசாத் இயக்கியுள்ள அறிவான்’ திரைப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பிரபு சாலமன், சீனு ராமசாமி, அல்போன்ஸ் புத்திரன், நடிகர்கள் ஆரி அர்ஜுனன், வெற்றி, விக்ராந்த் ஆகியோர் இணையம் வழியாக இன்று வெளியிட்டனர்.

ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, ஒரு என்கவுண்டரால் வேறு ஊருக்கு மாற்றலாகிறார். அங்கு அடுத்தடுத்து தொடர்ந்து நான்கு கொலைகள் நிகழ்கிறது. அந்த கொலைகளுக்குப் பின்னால் இருப்பது யார், அந்த கொலைகளுக்கு காரணம் என்ன என்பதை அவர் கண்டுபிடிக்கிறாரா என்பதுதான் படத்தின் கதை.

ஒவ்வொரு நொடியும் மனதை அதிர வைக்கும் திருப்பங்களுடன், பரபரவென பறக்கும் திரைக்கதையில், ஒரு புதுமையான இன்வஸ்டிகேசன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆனந்த் நாக் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். பிக்பாஸ் ஜனனி கதாநாயகியாக நடித்துள்ளார்.மிக முக்கிய வேடங்களில் பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கௌரி சங்கர், சரத் ராஜ் ஆகியோர் இணைந்துள்ளனர்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் நெய்வேலியில் 65 நாட்கள் நடத்தப்பட்டு, முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதையடுத்து இந்த மாதம் இசை வெளியீட்டு விழாவை நடத்தவும், விரைவில் படத்தை திரைக்குக் கொண்டுவரவும்  திட்டமிட்டுள்ளனர்.

படக்குழு:-

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்த திரில்லர் திரைப்படத்தை, எம் டி பிக்சர்ஸ் துரை மகாதேவன் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

ஹிப் ஹாப் தமிழாவிடம் பணியாற்றிய கார்த்திக் ராம் எரா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் யஷ்வந்த் ஒளிப்பதிவு செய்ய, சத்யா எடிட்டிங் செய்கிறார். சூர்யா கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஏ ராஜா மக்கள் தொடர்பு பணிகளைக் கவனிக்கிறார்.

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this