HomeCinemaவேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பிரமாண்ட தயாரிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2.' நயன்தாரா நடிக்க சுந்தர் சி...

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பிரமாண்ட தயாரிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2.’ நயன்தாரா நடிக்க சுந்தர் சி இயக்குகிறார்.

Published on

‘மூக்குத்தி அம்மன் 2′ சுந்தர். சி இயக்கத்தில், டிவைன் ஃபேண்டஸி ஜானரில், தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்’ டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் உருவாகவிருக்கிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்மையான வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து ரசிகர்களுக்கு திரையரங்குகளில் புதுவிதமான அனுபவத்தை வழங்குவதற்காக படக்குழுவினர் தெளிவாக திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள்.

‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அஸோஸியேட் ஆகிறது. மேலும் ஐ வி ஓய் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இஷான் சக்சேனா, சுனில் ஷா மற்றும் ராஜா சுப்பிரமணியன் தலைமையிலான பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணை தயாரிப்பாளராக பங்களிப்பு செய்கிறது.

‘அரண்மனை’ பட வரிசையில் வெளியான நான்கு பாகங்களையும் இயக்கி வெற்றி பெற்ற அனுபவம் கொண்ட இயக்குநர் சுந்தர் சி- வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2 ‘எனும் திரைப்படத்தினை இயக்குவதால், இந்தத் திரைப்படமும் நிச்சயமாக பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமையும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் முதல் பாகத்தை விட, பல அற்புதமான திரையரங்க அனுபவ தருணங்களை வழங்கும் வகையில் உருவாகிறது. படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் தெரியவரும்.

Latest articles

ரசிகர்களிடம் வரவேற்பு, பத்திரிகைகளிடமிருந்து பாராட்டு… அனைவருக்கும் நன்றி தெரிவித்து வெற்றியைக் கொண்டாடிய ‘தி டார்க் ஹெவன்’ படக்குழு!

சமீபத்தில் வெளிவந்த படங்களில் வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் என்று பெயர் பெற்று ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்டு, ரசிகர்களின் வரவேற்பினால்...

‘சிறை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் எல் கே அக்ஷய் குமார் நடிக்கும் புதிய...

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் கலந்த குடும்பக் கதையான 'அப்பா குட்டி' திரைப்படம், அக்டோபர் 16, 2026...

மாறுபட்ட கதைகளில் நடிக்கும் எல் கே அக்ஷய் குமாரின் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

‘சிறை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் எல் கே அக்ஷய் குமார் நடிக்கும் புதிய...

More like this