HomeCinemaஹிட் கேஸ் 3 படத்தின் கலக்கலான அறிவிப்பு... மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டருக்கு தயாரான நானி!

ஹிட் கேஸ் 3 படத்தின் கலக்கலான அறிவிப்பு… மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டருக்கு தயாரான நானி!

Published on

நேச்சுரல் ஸ்டார் நானி, தொடர்ந்து மாறுபட்ட கதைக்களங்களில், ப்ளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான, சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படமும் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டராக வெற்றி பெற்றுள்ளது.

ஹாட்ரிக் பிளாக்பஸ்டர்களை தந்திருக்கும் நானி, அடுத்ததாக அவரது 32வது படத்தின் மூலம் மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டருக்கு தயாராகிறார். நானியின் கேரக்டரைப் பற்றிய ஸ்னீக் பீக் மூலம், அவரது அடுத்த படமான ஹிட் கேஸ் 3 பட அறிவிப்பு, இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, வால் போஸ்டர் சினிமாவின் பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில், டாக்டர் சைலேஷ் கொலானு இப்படத்தை இயக்குகிறார்.

Hunter’s Command என பெயரிடப்பட்ட கிளிப், ஒரு ஹிட் (HIT) அதிகாரி பனி மலைகளில் காரை ஓட்டுவது மற்றும் ஒரு ஜோடி போலீஸ் அதிகாரிகள் அவரைத் துரத்துவது போன்ற ஒரு புதிரான குறிப்பில் தொடங்குகிறது. ஹிட் அதிகாரி ஆபத்தில் இருப்பதாக ஒரு அதிகாரி மற்றவரை எச்சரிப்பதால் நம் பதற்றம் அதிகரிக்கிறது. ஹிட் அதிகாரியே ஆபத்தானவர் என்றும் அவர் பெயர் அர்ஜுன் சர்க்கார் என்றும் அந்த அதிகாரி தெரிவிக்கிறார். அர்ஜுன் சர்க்கார் கெட் செட் அண்ட் கோ என்று சொல்லும் உச்சரிப்புடன் வீடியோ முடிவடைகிறது.

நானி சுருட்டு புகைக்கும்போதும், காரை ஓட்டும்போதும் ரத்தம் தோய்ந்த கைகள் மற்றும் கோடரியுடன் ஸ்டைலாகவும், கொடூரமாகவும் தோன்றுகிறார். அர்ஜுன் சர்க்காராக அவரது சித்தரிப்பு மிரட்டல்லாக இருக்கிறது. அர்ஜுன் சர்க்கார் என்ற கதாபாத்திரத்தின் பெயர் படத்தில் அவரது கதாபாத்திரத்தைப் போலவே சக்திவாய்ந்ததாக ஒலிக்கிறது.

முன்னதாக ஹிட் பட வரிசையை இயக்கிய டாக்டர் சைலேஷ் கொலானு ஹிட் : கேஸ் 3 படத்தை இயக்குகிறார். முந்தைய படங்களைத் தாண்டி இன்னும் ஸ்டைலான, பிரமாண்டமான படமாக இருக்குமென்பதை டீசர் உறுதி செய்கிறது.

பிரபல ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸால் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் பிரமிப்பூட்ட்டுகின்றன, அதே சமயம் மிகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை மட்டும் செய்து வரும் மிக்கி ஜே மேயர் தனது துடிப்பான இசை மூலம் டீசரின் தீவிரத்தை உயர்த்துகிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் படத்தொகுப்பாளராகவும், ஸ்ரீ நாகேந்திரா தங்கா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

ஹிட் தொடரின் மூன்றாம் பாகத்தில் அர்ஜுன் சர்க்காரின் கதாபாத்திரம் எவ்வளவு தீவிரமானதாக இருக்கும் என்பதை சொல்லும் இந்த டீசர் உண்மையிலேயே மிரட்டலாக இருக்கிறது.

படம் மே 1, 2025 அன்று கோடை விடுமுறையின்போது வெளியாகவிருக்கிறது.

Latest articles

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட்...

இந்த படம் நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி! -நாகபந்தம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விராட் கர்ணா 

அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்க புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான...

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக...

இஸ்லாமியர்கள் குறித்த பார்வையை இந்த படம் மாற்றி இருக்கிறது என்பதை பெரும் வெற்றியாக நினைக்கிறேன்! -‘ஹபீபி’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றிக்கு...

More like this