HomeCinemaயோகிபாபு , லஷ்மி மேனன் நடிப்பில் இயற்கையை அழிக்கும் பேராசை மனிதர்களை மையப்படுத்திய மலை செப்டம்பரில்...

யோகிபாபு , லஷ்மி மேனன் நடிப்பில் இயற்கையை அழிக்கும் பேராசை மனிதர்களை மையப்படுத்திய மலை செப்டம்பரில் ரிலீஸ்!

Published on

யோகிபாபு , லஷ்மி மேனன், காளிவெங்கட், அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘மலை.’

மனித வாழ்வானது இயற்கையோடு இணைந்தது. மனிதர்களை போல விலங்குகளும், தாவரங்களும் மலைகளும் ஆறுகளும் நீர் நிலைகளும் பூமியில் அதி முக்கியமானதாக இருக்கிறது. மனிதர்களின் அதீத ஆசையால் இயற்கையை மெல்ல மெல்ல மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக அழித்து வந்துள்ளார்கள்.

மனிதன் முதலில் தன் சுய நலத்துக்காக சுரண்ட ஆரம்பித்தது சக மனிதனிடமிருந்துதான். அப்படி இரக்கமில்லாமல் சுரண்ட ஆரம்பிக்கும் மனிதன் மெல்ல மெல்ல இயற்கை வளங்களை சுரண்ட ஆரம்பிக்கிறான். இதிலிருந்து தப்பிக்க அதிகாரம், அரசியல், மதம், சாதி , இனம் என்று இதற்கு பின்னால் நின்றுகொண்டு சக மனிதர்கள் மீது அன்பை மறந்து எதிர்கால சந்ததியினரின் வாழ்வை குறித்து கவலைப்படாமல் மனித பேராசை இயற்கையை மொத்தமாக இன்று அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

இந்த வேதனையாக விஷயங்களை மையமாக வைத்து தமிழக மலைக்கிராமம் ஒன்றில் நடக்கும் இந்த கதை மனிதனின் சுய நல கோரப்பசிக்கு இயற்கையின் பதில் என்ன? என்பதைப் பற்றிய ஆழமான படைப்பாக வந்திருக்கிறது.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

படத்தின் பாடல்கள் இன்னும் சில நாட்களிலும் படம் வரும் செப்டம்பரிலும் வெளியாகவிருக்கிறது.

Latest articles

தமிழ் தூதர் தனிநாயகம் அடிகளார் ஆவணப்படம் வெளியீடு 

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் (Unformula Films) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், 'நேஷனல் கிரஷ்' ராஷ்மிகா மந்தானா...

தேசிய விருது வென்ற தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் இருவரும் ‘மார்கோ’ புகழ் உன்னி முகுந்தனுடன் இணையும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம்!

குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டுடியோஸ், ‘மார்கோ’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர்...

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

நடிகை நிதி அகர்வால் தனது திரைப்பயணத்தின் முக்கியமான கட்டத்தில் நுழைந்துள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல...

More like this