HomeCinemaதிரவ் - நிகிலா - விஜய் - விபிதா நடிக்கும் 'டோபமைன் @ 2.22' ...

திரவ் – நிகிலா – விஜய் – விபிதா நடிக்கும் ‘டோபமைன் @ 2.22’ படத்தை தயாரிக்கும் ஹாஷ்டேக் FDFS  புரொடக்ஷன்ஸ்!

Published on

திரவ் இயக்கி, முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘டோபமைன் @ 2.22.’  நாம் அடிக்கடி சந்திக்கும் மக்கள், வாழ்க்கை முறை மற்றும் சமகால பிரச்சனைகளை எதிரொலிக்கும் விதத்தில் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

படம் பற்றி திரவ்வடம் கேட்டபோது , “’டோபமைன் @ 2.22’ படத்தின் கதை வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த ஏழு பேரைச் சுற்றி வருகிறது. அவர்களின் வாழ்க்கை இன்னும் நடக்காத ஒரு கொலையால் இணைக்கப்படுகிறது. அந்த சமயத்தில் அவர்களின் உணர்வுகள் மற்றும் ஒரு விஷயத்திற்கு அடிமையாதல் பற்றிய கதையாக இது நகரும். 18-20 நாட்களில் முழுப் படப்பிடிப்பையும் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் படமாக்கி முடித்துள்ளோம். ‘குட்நைட்’, ‘லவ்வர்’ படங்கள் புகழ் நிகிலா ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்- சீசன்3’யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜய் டியூக், யூடியூப் தொடரான, ‘ஷாலினி ஸ்டோர்’ மூலம் நன்கு அறியப்பட்டவர். அவரும் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் ‘குற்றம் கடிதல்’ புகழ் சத்யா நடித்துள்ளார். விபிதா, சதீஷ், சாம்சன் மற்றும் ’நூடுல்ஸ் படத்தில் நடித்த மாஸ்டர் சக்திவேலன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் திறமையால் படத்தை சிறந்ததாக உருவாக்கியுள்ளனர். குறிப்பாக, க்ளைமாக்ஸில் இடம்பெறும் பாடல் அனைவரையும் பிரதிபலிக்கும் மற்றும் தொடர்புபடுத்தும் வகையில் கபில் கபிலன் அதை பாடியுள்ளார். படத்தில் இடம்பெறும் ஆங்கிலப் பாடல் ஒன்றை ’கைதி’, ‘லியோ’ புகழ் சரண்யா கோபிநாத் பாடியிருக்கிறார்” என்றார்.

’வெப்பம் குளிர் மழை’ படத்தைத் தயாரித்த ஹாஷ்டேக் FDFS  புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

படக்குழு:- ஆலன் ஷோஜி இசையமைக்க, பிருத்வி ராஜேந்திரனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு மற்றும் பாடல் வரிகளை திரவ் கையாண்டுள்ளார். ஆனந்த் ராமச்சந்திரன் மற்றும் கிஷோர் காமராஜ் ஆகியோர் ஒலிப்பதிவிலும் பப்ளிசிட்டி டிசைனில் தினேஷூம் பணியாற்றியுள்ளனர். சுரேஷ் சந்திரா மற்றும் அப்துல் நாசர் மக்கள் தொடர்பு பணிகளை கவனிக்கின்றனர்.

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this