HomeCinemaசுதந்திர தினத்தில் விஜய்யின் கோட் பட டிரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! ஆகஸ்ட் 17-க்காக...

சுதந்திர தினத்தில் விஜய்யின் கோட் பட டிரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! ஆகஸ்ட் 17-க்காக உற்சாகத்துடன் காத்திருக்கும் திரையுலகம்.

Published on

தளபதி விஜய் நடிக்க, வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘கோட்’ திரைப்படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகவிருக்கிறது. சுதந்திர தினமான இன்று அதற்கான அறிவிப்பு புதிய போஸ்டரில் வெளியானது.

இரட்டை வேடங்களில் தளபதி விஜய் தோன்றும் ‘கோட்’ விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்த திரைப்படமாக ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி மற்றும் யோகி பாபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும்.

தளபதி விஜய்யின் 68வது படமான ‘கோட்’, அவரது திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும். தான் ஏற்றிருக்கும் இரண்டு கதாபாத்திரங்களுக்காக கடினமான உழைப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தேசத்தின் பெருமையான சுதந்திர தினத்தன்று வெளியிடப்பட்டுள்ள ‘கோட்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் எதிர்பார்ப்புகளை இன்னும் எகிற வைத்துள்ளது.

படம் ரசிகர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து படைக்கும் வகையில் செப்டம்பர் 5-ம் தேதி உலகெங்குமுள்ள திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

Latest articles

முகேன் ராவ் நடிப்பில் மருத்துவப் பின்னணியில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் ‘நிறம்’ நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது!

K Square Cinemas தயாரிப்பில், கே. பிந்து மாதவி தயாரித்து, பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள திரைப்படம் ‘நிறம்’. முகேன்...

கல்விக்காகத் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தனது வாழ்க்கையையும் சொத்துக்களையும் அர்ப்பணித்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக...

சிட்பண்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வைத் தூண்டும் ‘மதுர மோசடி’ விரைவில் ரிலீஸ்!

சமூகத்தில் நடைபெறும் சிட்பண்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வைத் தூண்டும்படியும், குடும்ப உணர்வுகளையும் இணைத்தும் வி.கே. விஜயகண்ணா இயக்கியுள்ள படம்...

‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் இறுதியாக உருவான ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடலான ‘வா சிவா’ வெளியீடு!

https://www.youtube.com/watch?v=1QkC9LEGzNw இயக்குநரும் நடிகருமான K. P. ஜெகன் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஜெயில் மேட்ஸ்' திரைப்படத்தில், மறைந்த...

More like this