HomeCinemaதிரில்,  திகில், மிரட்டல்... சமுத்திரகனி நடிப்பில் ராம்குமார் சுப்பாராமன் இயக்கும் படத்திலிருக்கும் விறுவிறு அம்சங்கள்!  

திரில்,  திகில், மிரட்டல்… சமுத்திரகனி நடிப்பில் ராம்குமார் சுப்பாராமன் இயக்கும் படத்திலிருக்கும் விறுவிறு அம்சங்கள்!  

Published on

‘கண்டுபிடி கண்டுபிடி’, ‘ஐ.பி.சி 376’ என்ற படங்களை இயக்கிய ராம்குமார் சுப்பாராமன், மூன்றாவது படைப்பாக சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

சமுத்திரகனியின் ஜோடியாக முன்னணி கதாநாயகி ஒருவர் நடிக்கவிருக்கிறார். அவர் யார் என்பதை ரகசியமாக வைத்துள்ளது படக்குழு.

‘முதல் கனவே’, ‘அதே நேரம் அதே இடம்’, ‘ஆட்டி’ ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்ட இசக்கி கார்வண்ணன் ‘பகிரி’, ‘பெட்டி கடை’, ‘தமிழ்க் குடிமகன்’ ஆகிய மூன்று படங்களை தயாரித்து, இயக்கி வெளியிட்டார். அடுத்ததாக தனது ‘லட்சுமி கிரியேஷன்ஸ்’ பட நிறுவனம் சார்பில் தனது 7-வது படைப்பாக இந்த படத்தை தயாரிக்கிறார். படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலுள்ள அழகிய இடங்களில் நடக்கவிருக்கிறது.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”அநியாயங்கள் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் கதாநாயகன் தீயவர்களை தட்டி கேட்கும் கதைகள் ஆயிரக்கணக்கில் வந்துள்ளது. ஆனால் இந்த கதை முற்றிலும் மாறுபட்டது. முழுவதும் வேறுபட்டது. இந்த படத்தின் ஹீரோ நியாயத்தை எதிர் கொள்வதே சிறப்பாக இருக்கும். மக்களின் கைத் தட்டலோடு காட்சிகள் நகரும்.

திரில்லும், திகிலும் மட்டுமல்ல மிரட்டலும் சேர்ந்த விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து, மதுரை வட்டார வழக்கில் வசனம் எழுதியிருக்கிறேன். சமுத்திரகனி சார் கதையை நான்கு மணி நேரத்தில் படித்து விட்டுப் பாராட்டினார். அதை மிகப்பெரிய விருதாக நினைக்கிறேன். தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் படத்தை வரும் டிசம்பருக்குள் ரிலீஸ் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார். படத்தின் தலைப்பை பிரபல கதாநாயகன் அறிமுகப்படுத்தவிருக்கிறார்” என்றார்.

Latest articles

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

துல்கர் சல்மானின் ஐ ‘ம் கேம் டிரெய்லர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=MDtbNcgqAXc மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்”...

உற்சாகமாக நடந்த கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட நடு நாடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்குகிறார்.   சாகித்யா கிரியேஷன் மற்றும் தி...

‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது!

பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான ‘வதந்தி...

More like this