HomeCinemaடப்பிங் பணிகளை துவங்கியது ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' படக்குழு!

டப்பிங் பணிகளை துவங்கியது ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ படக்குழு!

Published on

ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கியுள்ள ‘ஸ்வீட் ஹார்ட்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலம், பௌசி, சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் தலைப்பினை அறிவிக்கும் காணொளி சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில்.. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்கள். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவிருக்கிறது.

காதலை கொண்டாடும் படைப்பாக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.

பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தை மேற்கொள்ள, படத் தொகுப்பு பணிகளை தமிழரசன் கவனிக்கிறார்.

Latest articles

உற்சாகமாக நடந்த கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட நடு நாடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்குகிறார்.   சாகித்யா கிரியேஷன் மற்றும் தி...

‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது!

பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான ‘வதந்தி...

திரைக்கு வர தயாராகிறது காதலும் த்ரில்லும் கலந்த விறுவிறுப்பான திரைப்படம் ‘சிக்னல் அட் 11.30.’

'சிக்னல் அட் 11.30' என்ற தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து படம்...

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=K7zjRJ_0sgk   நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. உலகம்...

More like this