HomeCinema‘ஜமா’ படத்தில் வலுவான கதாபாத்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்! -நடிகர் சேத்தன்

‘ஜமா’ படத்தில் வலுவான கதாபாத்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்! -நடிகர் சேத்தன்

Published on

சின்னத்திரையில் நடிப்பால் அசத்திவந்த சேத்தன் ‘விடுதலை’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் தனது அட்டகாசமான பங்களிப்பால் பாராட்டுகளைப் பெற்றார். அதையடுத்து அவர் நடித்திருக்கும் ஜமா’. வரும் ஆகஸ்ட் 2-ல் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் அவரிடம் பேசியபோது…

”இதுபோன்ற அற்புதமான திரைப்படத்தை உருவாக்கிய பாரி இளவழகன் மற்றும் எஸ்எஸ்பிவி லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர்கள் இருவரையும் முதலில் பாராட்டுகிறேன். கோல்ட்- ப்ளெட்டட் க்ரைம் த்ரில்லர் அல்லது மேற்கத்திய கருப்பொருளை கதைக்களமாகத் தேர்ந்தெடுப்பது பல புது இயக்குநர்களின் பொதுவான நடைமுறையாகிவிட்ட நிலையில், நமது கலாச்சாரத்தின் நெறிமுறை அழகியலை கதையாக்கிய பாரியின் துணிச்சலான முடிவு தனித்துவமானது.

ஒரு இயக்குநராக, அவர் அதிக உயரங்களை அடைவதோடு சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் அங்கீகரிக்கப்படுவார். வெற்றிமாறன் சாரின் விடுதலைப் படத்திற்குப் பிறகு, ‘ஜமா’ படத்தில் வலுவான கதாபாத்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். திரையரங்குகளில் இருக்கும் ஒவ்வொரு பார்வையாளர்களின் இதயத்தையும் தொடும் படம் இது” என்றார்.

படத்தை பரி இளவழகன் இயக்கி, நடித்திருக்கிறார். சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என் மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, ஜேசுராஜ், எஸ்.சாரதி கிருஷ்ணன், சிவா மாறன், ஏ.கே.இளவழகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார்.

படத்தை பிக்சர் பாக்ஸ் நிறுவனத்தின் அலெக்சாண்டர் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்.

எஸ்எஸ்பிவி லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட்டின் எஸ். சாய் தேவானந்த், எஸ். சசிகலா, எஸ். சாய் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Latest articles

திரைக்கு வர தயாராகிறது காதலும் த்ரில்லும் கலந்த விறுவிறுப்பான திரைப்படம் ‘சிக்னல் அட் 11.30.’

'சிக்னல் அட் 11.30' என்ற தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து படம்...

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=K7zjRJ_0sgk   நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. உலகம்...

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

More like this