HomeCinemaவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு...

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையவாசிகளிடம் பெருகும் ஆதரவு!

Published on

இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் கூட்டணியில் தயாராகும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ரசிகர்கள் எதிர்பாராத வகையில் பிரதீப் ரங்கநாதனின் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருப்பது இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா, சீமான், கிரித்தி ஷெட்டி, யோகி பாபு, ஆனந்த் ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இன்றைய இளம் இணைய தலைமுறையினரின் காதலை நகைச்சுவையுடன் சொல்லப்போகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘நானும் ரவுடிதான்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் – ‘லவ் டுடே’ படத்தின் மூலம் பிரமாண்ட வெற்றியை பெற்று, தமிழ் திரையுலகத்தின் நம்பிக்கைக்குரிய நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் – ‘மாஸ்டர்’, ‘ லியோ’ போன்ற பிரம்மாண்டமான படைப்புகளை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம்- ஆகியோரின் கூட்டணியில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ தயாராகி இருப்பதால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.

படக்குழு:- சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார்.‌

Latest articles

திரைக்கு வர தயாராகிறது காதலும் த்ரில்லும் கலந்த விறுவிறுப்பான திரைப்படம் ‘சிக்னல் அட் 11.30.’

'சிக்னல் அட் 11.30' என்ற தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து படம்...

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=K7zjRJ_0sgk   நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. உலகம்...

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

More like this