HomeCinemaகாதலில் தோல்வியடைந்தும் லட்சியத்தைக் கைவிடாத நாயகன்... கமர்ஷியல் அம்சங்களுக்கு குறையில்லாத 'முதல் காதல் மரியாதை' ஜூலை...

காதலில் தோல்வியடைந்தும் லட்சியத்தைக் கைவிடாத நாயகன்… கமர்ஷியல் அம்சங்களுக்கு குறையில்லாத ‘முதல் காதல் மரியாதை’ ஜூலை 26 தியேட்டர்களில் ரிலீஸ்!

Published on

‘அலா நின்னு சேரி’ என்ற தெலுங்குப் படத்தை, ‘விஷன் மூவி மேக்கர்ஸ்’ சாய் சுதாகர் சாய், ‘முதல் காதல் மரியாதை’ என்ற பெயரில் தமிழில் தயாரித்துள்ளார். தினேஷ் தேஜ் கதாநாயகனாகவும் ஹெப்பா பட்டேல், பாயல் ராதாகிருஷ்ணா கதாநாயகியகளாகவும் நடித்துள்ளார்கள்.

வெளியீட்டுக்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் படம் வரும் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”எல்லோருக்கும் முதல் காதல் வருவது உண்டு. அதை நாம் காதலிக்கும் பெண்ணிடம் கூற தைரியம் வருவதில்லை. அப்படி காதலிக்கும் பெண்ணை கடைசிவரை காதலித்து கைப்பிடிப்போமா என்றும் தெரியவில்லை. காதலித்த பெண்ணை நாம் திருமணம் செய்து கொண்டால் அதைவிட அதிர்ஷ்டம் வேறு இல்லை தான்.

காதலித்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய அவரின் தாயார் ஏற்பாடு செய்து விடுகிறார். இதை அறிந்த நாயகன் திருமண மண்டபத்திற்கு செல்கிறான். அங்கே புது மாப்பிள்ளை தாலியை கட்ட முற்படும்பொழுது அங்கிருந்து நாயகன் திரும்பி விடுகிறான். பின் நாயகன் துவண்டு விடாமல் தன் வாழ்க்கையின் லட்சியத்தை நோக்கி பயணிக்கிறான். கடைசியில் தன் காதலியை கரம் பிடித்தானா ? இல்லை லட்சியத்தை அடைந்தானா? என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.

படக்குழு:-
தயாரிப்பு: சாய் சுதாகர்
கதை திரைக்கதை இயக்கம்: நரேஷ் சிவன்
வசனம்: சாய் ரமேஷ்
ஒளிப்பதிவு: ஆண்ட்ரூ பாபு
இசை: சுபாஷ் ஆனந்த்
பாடல்கள்: சந்திர போஸ்
சண்டைப் பயிற்சி: கிங் சாலமன்
எடிட்டிங்: கோத்தகிரி வெங்கடேஸ்வரா ராவ்
மக்கள் தொடர்பு: வெங்கட்

Latest articles

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=K7zjRJ_0sgk   நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. உலகம்...

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

More like this