HomeCinemaஐந்து மனைவிகளுடன் வாழ்க்கை... அசத்தல் காமெடியில் 'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்' மலையாள வெப் சீரிஸ், இப்போது டிஸ்னி+...

ஐந்து மனைவிகளுடன் வாழ்க்கை… அசத்தல் காமெடியில் ‘நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்’ மலையாள வெப் சீரிஸ், இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்! 

Published on

கேரள மக்களின் வாழ்வில் திருமண பந்தமும் கலாச்சாரமும் சார்ந்து ஒரு முழுமையான பொழுதுபோக்கு படைப்பாக, ஒருவன் ஐந்து மனைவிகளுடன் வாழ்வை எதிர்கொள்ளும் கதையம்சத்தில் உருவாகியுள்ளது ‘நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்’ என்ற வெப் சீரிஸ்.

மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் இந்த மலையாள ஒரிஜினல் சீரிஸினை ஜூலை 19, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி மற்றும் பெங்காலி என ஏழு மொழிகளில்) ஸ்ட்ரீம் செய்யத்துவங்கியுள்ளது.

பழங்கால கேரள வாழ்க்கை முறையின் பின்னணியில், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும், குழப்பமான பலதரப்பட்ட திருமண பாணிகளால் நிகழும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, சரவெடி காமெடியுடன் அசத்துகிறது
இந்த சீரிஸ்.

சஸ்பென்ஸ் மற்றும்  எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸில், சுராஜ் வெஞ்சரமுடு முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கிரேஸ் ஆண்டனி, ஷேவ்தா மேனன், கனி குஸ்ருதி, ஆல்பி பஞ்சிகரன், நிரஞ்சனா அனூப், பிரசாந்த் அலெக்சாண்டர், அம்மு அபிராமி, ஜனார்த்தனன், கலாபவன் ஷாஜோன் & ரமேஷ் பிஷாரடி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

ரஞ்சி பணிக்கர் இந்த சீரிஸை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். நிகில் S பிரவீனின் அசத்தலான காட்சியமைப்புகள் மற்றும் ரஞ்சின் ராஜின் வசீகரிக்கும் இசையில், இந்த சீரிஸ் நகைச்சுவை, கலந்த அசத்தலான அனுபவத்தை தரும் சீரிஸாக உருவாகியுள்ளது,

Latest articles

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, பிரபல பாடகி சாருலதா மணி எழுதி இசையமைத்த ‘தென்றலில்’  சுயாதீன பாடல்!

https://www.youtube.com/watch?v=w1kKo7v-z6k இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து உருவான 'தக் லைஃப்' திரைப்படத்தில் இடம்பெற்று, மாபெரும் வரவேற்பைப் பெற்ற...

டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் பிறை’ மே 1 முதல் Amazon Prime Video தளத்தில் பார்த்து ரசிக்கலாம்!

1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று...

ராக்ஸ்டார் DSP vs தேவி ஸ்ரீ பிரசாத்… சன் நெக்ஸ்ட் தளத்தில் ஏப்ரல் 30 முதல் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ அதிரடி ஆரம்பம்!

https://www.youtube.com/watch?v=2bwUK-NvtSI   ராக்ஸ்டார் DSP-யின் மற்றொரு முகத்தை காட்டும் ஜாலி ஓ ஜிம்கானா - சன் நெக்ஸ்ட்-இன் புதிய நிகழ்ச்சி அவரது துள்ளல்...

More like this