HomeCinemaவேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருதை வென்றது, இயக்குநர் ராஜு முருகன் தயாரித்த ‘பராரி’ திரைப்படம்!

வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருதை வென்றது, இயக்குநர் ராஜு முருகன் தயாரித்த ‘பராரி’ திரைப்படம்!

Published on

இயக்குநர் ராஜு முருகன் தயாரித்துள்ள ‘பராரி’ (ஆங்கிலத்தில் ‘தி மைக்ரண்ட்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது) 57வது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருது 2024’ல் ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான வெண்கல விருதை வென்று பாராட்டுகள் பெற்றுள்ளது.

இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் ‘பராரி’ படக்குழுவினரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

மண்சார்ந்த கதைகளை அர்ப்பணிப்போடு முழு இதயத்தோடும் படமாக்கும்போது அது எல்லைகளைத் தாண்டி பலதரப்பட்ட பார்வையாளர்களையும் சென்றடையும். அதுபோன்ற ஒர் படமான பராரி திரையரங்குகளில் வெளியாகும் போது நல்ல வரவேற்பைப் பெறும் என்ற பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

’ஜோக்கர்’, ‘குக்கூ’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜு முருகனிடம் உதவியாளராக இருந்த எழில் பெரியவேடி இப்படத்தை இயக்கியுள்ளார். ‘தோழர் வெங்கடேசன்’ புகழ் ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

படக்குழு:-

பல நேர்த்தியான மெல்லிசைகளை உருவாக்கிய ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். உமாதேவி பாடல்கள் எழுதியுள்ளார். ஜி.முத்துக்கனி (மேக்கப்), எஸ்.அழகிய கூத்தன் மற்றும் சுரேன்.ஜி (ஒலி வடிவமைப்பு), சுரேன்.ஜி (ஒலிக்கலவை), ஃபயர் கார்த்தி (ஸ்டண்ட்), அபிநயா கார்த்திக் (நடன அமைப்பு), ஏ.ஆர். சுகுமாறன் பிஎஃப்ஏ (கலை), சாம் ஆர்டிஎக்ஸ் (எடிட்டர்), ஸ்ரீதர் (ஒளிப்பதிவு) மற்றும் சுரேஷ் சந்திரா & அப்துல் ஏ நாசர் (மக்கள் தொடர்பு)

Latest articles

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=K7zjRJ_0sgk   நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. உலகம்...

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

More like this