HomeCinemaஇலக்கிய மேதை எம் டி வாசுதேவன் நாயரை கொண்டாடும் வகையில், 'மனோதரங்கல்' மலையாள ஆந்தாலஜி தொடரின்...

இலக்கிய மேதை எம் டி வாசுதேவன் நாயரை கொண்டாடும் வகையில், ‘மனோதரங்கல்’ மலையாள ஆந்தாலஜி தொடரின் முன்னோட்டம் வெளியீடு!

Published on

‘இலக்கிய மேதை’ எம் டி வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுகால பாரம்பரியத்தை போற்றி கொண்டாடும் வகையில் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர கலைஞர்களின் பங்களிப்பில் தயாரான ‘மனோதரங்கல்’ எனும் மலையாள ஆந்தாலஜி தொடரை ஜீ 5 அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எம் டி வாசுதேவன் நாயரின் பிறந்தநாளில் ஜீ 5 – ஒன்பது புதிரான கதைகளை கொண்ட ‘மனோரதங்கல்’ எனும் மலையாள ஆந்தாலஜி திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறது. இதில் மலையாள திரையுலகின் ஒன்பது சூப்பர் ஸ்டார்கள் மற்றும் எட்டு புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்களுடன் முன் எப்போதும் இல்லாத ஒத்துழைப்புடன் உருவாகி இருக்கிறது. இந்த ஆந்தாலஜி தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. மேலும் இந்தத் தொடர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

இந்தியாவின் குடும்பங்கள் சகிதமாக கொண்டாடப்படும் மிகப்பெரிய பொழுது போக்கு டிஜிட்டல் தளம் மற்றும் பன்மொழி கதை சொல்லியான ஜீ 5 – மலையாள திரையுலகின் புதிய சகாப்தத்தை வெளிப்படுத்தும் வகையில் ‘மனோரதங்கல்’ எனும் பாரம்பரிய தொடரை தொடங்குவதாக அறிவித்தது. ‘எம் டி யின் பிரம்மாண்டமான படைப்பு ‘ எனும் முத்திரையுடன் தயாராகி இருக்கும் இந்த பிரம்மாண்டமான திரைப்படம் எதிர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று திரையிடப்படும்.

முதன் முறையாக நட்சத்திர நடிகர்களும், திறமையான இயக்குநர்களும் ஜீ 5 யில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். பத்ம விபூஷன் டாக்டர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய ஒன்பது அழுத்தமான கதைகளை இந்தத் தொகுப்பு கொண்டிருக்கிறது.

இதில் ‘ஒல்லவும் தீரவும்’ ( சிற்றலைகள் மற்றும் நதிக்கரை) – பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கிறார். இதுவே இந்த தொடரின் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

கடுக்கண்ணவ : ஒரு யாத்திரை குறிப்பு ( கடுக்கண்ணவ: ஒரு பயணக் குறிப்பு) – இயக்குநர் ரஞ்சித்தின் இயக்கத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறார்.

ஷிலாலிகிதம் (கல்வெட்டுகள்) – இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிஜுமேனன் -சாந்தி கிருஷ்ணா – ஜாய் மேத்யூ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

காட்சி ( பார்வை) -இயக்குநர் ஷியாம பிரசாத் இயக்கத்தில் பார்வதி திருவோத்து – ஹரிஷ் உத்தமன் நடித்திருக்கிறார்கள்.

வில்பனா ( தி சேல்) – இயக்குநர் அஸ்வதி நாயர் இயக்கத்தில் மது- ஆசிப் அலி நடித்திருக்கிறார்கள்.

ஷெர்லாக்- இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் பகத் பாசில் மற்றும் ஜரீனா மொய்து நடித்திருக்கிறார்கள்.

ஸ்வர்க்கம் துறக்குன்ற நேரம் ( சொர்க்கத்தின் கதவுகள் திறக்கும் தருணம்) – இயக்குநர் ஜெயராஜன் நாயர் இயக்கத்தில் கைலாஷ்- இந்திரன்ஸ்- நெடுமுடி வேணு- என் ஜி பணிக்கர் – சுரபி- லட்சுமி நடித்துள்ளனர்.

அபயம் தீடி வேண்டும் ( மீண்டும் ஒருமுறை புகலிடம் தேடி) – இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் சித்திக் – இஷித் யாமினி- நசீர் நடித்துள்ளனர்.

காதல்க்காட்டு ( கடல் காற்று) – ரதீஷ் அம்பாட் இயக்கத்தில் இந்திரஜித் – அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார்கள்.‌

Latest articles

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=K7zjRJ_0sgk   நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. உலகம்...

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

More like this