HomeCinemaபான் இந்திய ஹாரர் படைப்பான 'யூ ஆர் நெக்ஸ்ட்' படத்தில் நடிக்கும் கே.எஸ்.ரவிக்குமார், ரச்சிதா மகாலட்சுமி!...

பான் இந்திய ஹாரர் படைப்பான ‘யூ ஆர் நெக்ஸ்ட்’ படத்தில் நடிக்கும் கே.எஸ்.ரவிக்குமார், ரச்சிதா மகாலட்சுமி! பூஜையுடன் துவங்கியது படப்பிடிப்பு.

Published on

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் பல்வேறு சம்பவங்களை வைத்து ஹாரர் படமாக உருவாகவிருக்கிறது ‘யூ ஆர் நெக்ஸ்ட்.’
கே.எஸ்.ரவிக்குமார், ரச்சிதா மகாலட்சுமி, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கேபிஒய் வினோத், ரஃபி, புல்லட்’ சமி உள்ளிட்டோர் நடிக்க, ஷரீஃப் இயக்குகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் துவங்கியது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய இயக்குநர் ஷரீஃப்,”இந்த படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகம் ஆகிறேன். என்னையும் என் கதையும் நம்பி இந்த படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்களுக்கும், இங்கு வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் ஊடகத்துறையினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியபோது,”இந்த படத்தின் கதை வித்தியாசமான ஹாரர் கதையாக இருந்தது.என்னுடைய கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது. இந்த படம் இளைஞர்களுக்கான திரைப்படமாக உருவாகிறது. படம் மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றார்.
ரக்சிதா மகாலட்சுமி, ”இந்த படம் எனக்கு ஒரு புதிராகவே உள்ளது. கடைசி நிமிடத்தில் படத்தின் கதையை கூறினார்கள். கதை  பிடித்திருந்ததாலும் படத்தில் நடிக்கும் சிறந்த நட்சத்திரங்களாலும் நடிக்க ஒத்துக் கொண்டேன். படத்தின் கதை ஹாரர் கதையம்சத்தை கொண்டது. இது உங்கள் அனைவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக இருக்கும்” என்றார்.
இந்த படம் பான் இந்தியா படமாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி இணைந்து தயாரிக்கின்றனர்.
படக்குழு:- கே ஜி ரத்தீஷ் ஒளிப்பதிவாளராகவும், அஜித் படத்தொகுப்பாளராகவும், டிஜிட்டல் மீடியா மூலமாக பிரபலமான அறிமுக இசையமைப்பாளர் ‘இசை பேட்டை’ வசந்த் இசையமைப்பாளராகவும், ஆடை வடிவமைப்பாளராக ஈகா பிரவீனும், தயாரிப்பு நிர்வாகியாக நந்தகுமாரும் பணியாற்றுகின்றனர். வேணு கலை இயக்கத்தையும், ஓம் பிரகாஷ் சண்டை பயிற்சியையும், ‘கலைமாமணி’ ஸ்ரீதர் நடனத்தையும் கவனிக்கின்றனர்.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this