HomeCinemaஆஸ்திரேலியா, அமெரிக்கா, லண்டன்... இப்போது இந்தியா. ரசிகர்களை உற்சாகப்படுத்த இசைப்பயணத்தை அறிவித்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ...

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, லண்டன்… இப்போது இந்தியா. ரசிகர்களை உற்சாகப்படுத்த இசைப்பயணத்தை அறிவித்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்!

Published on

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை ரசிகர்கள் சுருக்கமாக டிஸ்பி என்று அழைப்பார்கள். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை வசீகரிக்கும் வகையில் அவரது இசை இருப்பதால் அவருக்கு ‘ராக்ஸ்டார்’ என்ற பட்டத்தை ரசிகர்கள் வழங்கி உள்ளனர். தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி திரை உலகில் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் தேவி ஸ்ரீ பிரசாத் பல்வேறு விருதுகளை பெற்று உள்ளார். குறிப்பாக ‘அத்தாரிண்டிகி தாரேதி’ படத்துக்கான மதிப்புமிக்க நந்தி விருதும், ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்துக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல்,பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடன இயக்குனராக வெற்றிகரமாக திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, லண்டன் என பல நாடுகளில் வெற்றிகரமான இசைப் பயணங்களுக்குப் பிறகு தனது சொந்த நாட்டிற்கு திரும்புவதைக் குறிக்கும் வகையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியப் இசைப் பயணத்தை அறிவித்துள்ளார். கடந்த ஜூன் 21ம் தேதி உலக இசை தினத்துடன் இணைந்த டிஎஸ்பி இசை நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளியிட்டது, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் டிஎஸ்பி, தனது எக்ஸ் வலைதளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் சுற்றுப்பயணத்தின் முதல் நகரத்தைப் பற்றி ரசிகர்கள் யூகிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

https://www.facebook.com/share/r/NqgNPcnDdRs6HVDw/?mibextid=0VwfS7

டிஎஸ்பி -யின் இந்திய இசைப் பயணத்தை ஏசிடிசி ஈவென்ட்ஸ் (ACTC Events) தயாரித்து நிர்வகிக்கிறது. இந்த இசை நிகழ்ச்சி குறித்து கூடுதல் தகவல்களை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்திலும், ஏசிடிசி ஈவென்ட்ஸ் சமூக வலைத்தளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.

Latest articles

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

More like this