HomeCinemaவிஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படத்திலிருந்து 2-வது பாடல் வெளியீடு!

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திலிருந்து 2-வது பாடல் வெளியீடு!

Published on

விஜய் ஆண்டனியின் படங்களில் எப்போதும் அழகான மற்றும் மறக்க முடியாத பாடல்கள் இருக்கும். ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் அதன் தலைப்பைப் போலவே மனதைக் கவரும் மெல்லிசை மற்றும் பெப்பி பாடல்கள் என சுவாரஸ்யமான கலவையைக் கொண்டுள்ளது. கடந்த வாரம் வெளியான படத்தின் முதல் சிங்கிள் ‘தீரா மழை…’ நல்ல வரவேற்பைப் பெற்றதோடு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

இசையமைப்பாளர் ஹரி டஃபுசியாவின் மற்றொரு மெல்லிசை பாடலான ‘தேடியே போறேன் …’ என்ற இரண்டாவது பாடல் இன்று பிரபல இசை இயக்குநர்களான ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி. இமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது. ‘தீரா மழை…’ பாடலுக்கு பாராட்டு கிடைத்தது போலவே, இந்த ‘தேடியே போறேன்’ பாடலுக்கும் இசை ஆர்வலர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பாடலுக்கு ஹரி டஃபுசியா இசையமைத்திருக்க, ஜோத்ஸ்னா ராதாகிருஷ்ணன் பாடியிருக்க, முத்தமிழ் வரிகள் எழுதியுள்ளார். ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை விஜய் மில்டன் எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

படத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், மேகா ஆகாஷ், தாலி தனஞ்செயா, முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணா, ப்ருத்வி அம்பர், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் மற்ற இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணி, ராய் மற்றும் வாகு மசான் ஆகியோர். படத்தொகுப்பை பிரவீன் கே.எல். கையாண்டுள்ளார்.

படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் தெரியவரும்.

Latest articles

LCU மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு…. ‘பென்ஸ்’ திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் ரவி மோகன்!

தமிழ் சினிமாவின் திறமையான மற்றும் தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொண்டு வரும் நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், தனது தனித்துவமான...

சிறப்பு அதிகாரியால் நடத்தப்படும் தேர்தலை புறக்கணித்த CTA உறுப்பினர்கள்… பின்னணியில் நடந்தது இதுதான்.

தென்னிந்திய சினிமா தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் CTA என்று அழைக்கப்படுகிறது. திரு. கே. ராம்நாத் மற்றும் சினிமா, கேமரா, படத்தொகுப்பு,...

ஜூன் 5-ம் தேதியிலிருந்து ZEE5 தளத்தில் பேட்ரியாட் திரைப்படம் ஸ்ட்ரீமாகிறது!

மலையாள ZEE5, புகழ்பெற்ற இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கிய பரபரப்பான அரசியல் திரில்லர் திரைப்படமான பேட்ரியாட் -ஐ ஜூன்...

ராம்சரண் இந்த கதாபாத்திரத்திற்காக கொடுத்த உழைப்பு அளவிட முடியாதது! -‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் புச்சி பாபு பேச்சு

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ என்கிற பிரமாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு...

More like this