HomeMovie Reviewபேட் பாய்ஸ் ரைடு ஆர் டை சினிமா விமர்சனம்

பேட் பாய்ஸ் ரைடு ஆர் டை சினிமா விமர்சனம்

Published on

‘பேட் பாய்ஸ்’ பட வரிசையில் நான்காவது பாகமாக வெளிவந்து, அதிரடி ஆக்சனால், கலக்கல் காமெடியால் ரசிகர்களை குஷியாக்கிக் கொண்டிருக்கும் ‘பேட் பாய்ஸ் ரைடு ஆர் டை.’

மைக் லோரி, மார்கஸ் பர்னெட் இருவரும் காவல்துறையின் துப்பறியும் நிபுணர்கள். அவர்கள் மறைந்த கேப்டன் கான்ராட் ஹோவர்ட், ருமேனிய மாஃபியாவுடன் தொடர்புடையவர் என்று சொல்லப்பட, அதை தவறென நிரூபிக்கும் நோக்கத்தில், மியாமி காவல் துறைக்குள் நிலவும் ஊழல் குறித்த விசாரணையில் இறங்குகிறார்கள். கேப்டன் கான்ராட் ஹோவர்ட் மீது வீண் பழி விழுந்ததன் பின்னணியை அலசி ஆராய்கிறார்கள். அவர்களை சிலபல பிரச்சனைகள் துரத்துகின்றன. அதையெல்லாம் அவர்கள் எப்படி சமாளித்தார்கள் என்பதை, வழக்கின் முடிவு என்னவானது என்பதை காமெடியும் ஆக்சனுமாய் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார்கள் இயக்குநர்கள் Adil & Bilall. ‘பேட் பாய்ஸ்’ சீரிஸின் 3-வது பாகத்தை இயக்கியவர்கள் இவர்கள்.

மைக் லோரியாக வருகிற வில் ஸ்மித்தின் எனர்ஜிக்கு பஞ்சமில்லாத ஆக்சன் சாகசங்கள் வியப்பை தந்துகொண்டேயிருக்க, காட்சிக்கு காட்சி காமெடியால் கலகலப்பூட்டியிருக்கிறார் சரவெடி படம் முழுக்க காமெடியால் நிறைத்திருக்கிறார் மார்கஸ் பர்னெட்டாக வருகிற மார்ட்டின் லாரன்ஸ். படு சீரியஸான தருணங்களில்கூட அவரது செயல்கள் சேட்டைகளாகி சிரிக்க வைக்கின்றன.

வில்லன் யாராக இருக்கும் என்பதை சுலபமாக கணிக்க முடிகிறது. அப்படியான ஒருசில குறைகள் இருந்தாலும், முந்தைய பேட் பாய்ஸ் சீரிஸைவிட கூடுதல் தாக்கத்தை ரசிகர்களிடம் உருவாக்க படக்குழு உழைத்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

Vanessa Hudgens, Alexander Ludwig, Paola Nuñez, Eric Dane, Ioan Gruffudd, Jacob Scipio, Melanie Liburd, Tasha Smith ​​with Tiffany Haddish and Joe Pantoliano என நீள்கிறது நடித்துள்ளவர்கள் பட்டியல். அத்தனைப் பேரும் கதையின் தன்மையுணர்ந்து அப்பணிப்புடன் நடித்திருப்பது படத்தின் பலம்.

இந்த படத்தை இந்தியாவில் ‘சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா’ தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும், ஐ மேக்ஸிலும் ஜூன் 6, 2024 அன்று வெளியிட்டுள்ளது.

Latest articles

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

More like this