HomeCinemaகாதலிகள் இருவரை நிராகரித்து அம்மாவின் ஆசையை நிறைவேற்ற முயற்சிக்கும் நாயகன்... அட்சயன் நடிக்கும் உலகநாதன்...

காதலிகள் இருவரை நிராகரித்து அம்மாவின் ஆசையை நிறைவேற்ற முயற்சிக்கும் நாயகன்… அட்சயன் நடிக்கும் உலகநாதன் படத்தில் ஏராளமாய் சுவாரஸ்யங்கள்!

Published on

அம்மாவின் ஆசையை நிறைவேற்ற தனது காதலிகள் இரண்டு பேரையும் நிராகரித்த நாயகன் என்ற ஒன்லைனில், கிராமிய கதையமைப்போடு காதலும், மோதலும் கலந்த அம்மா, மகன் சென்டிமெண்ட் டோடு கூடிய கதை ‘உலகநாதன்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது.

அட்சயன் ஹீரோவாக நடிக்க, ஏ.டி.ஆதிநாடார் மிகுந்த பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு சண்டைப் பயிற்சி மற்றும் படத்தொகுப்பு ஆகியவற்றை ஆ. ஆதவன் கவனிக்கிறார்.

கஞ்சா கருப்பு நகைச்சுவையுடன் கூடிய குணச்சித்திர வேடத்தில் நடிக்க, அட்சயனுக்கு ஜோடியாக யோக தர்ஷினி, கிரேட்டா என்று இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள்.

ஹீரோவின் ‘அம்மாவாக விஜய் டி.வி. சசிகலா நடித்திருக்கிறார். வில்லன்களாக கடற்கரை, நாகராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கதாநாயகன் முறையாக சிலம்பம் கற்றவர் என்பதால் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் மதுரை, மற்றும் ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

நடிகர்  சார்லஸ் தனா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை சார்லஸ், ஆதிநாடார் ராமநாதன், ஆதவன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் படத்தை விரைவில் வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது படக்குழு.

Latest articles

ஜீவி பிரகாஷ் நடித்துள்ள ‘வெக்கை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜீவி பிரகாஷ் நடித்துள்ள 'வெக்கை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், டிவைன் புரொடக்ஷன்ஸ் இணைந்து...

ஈகோ ராமன் சினிமா விமர்சனம்

'மனிதனிடம் இருக்கக்கூடாதது ஈகோ' என்பதை வலியுறுத்தும் சிறு முதலீட்டுப் படைப்பு. ராமன் பயங்கர ஈகோ பிடித்த தலைமையாசிரியர் . சக...

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படத்தை துவங்கிவைத்த அமைச்சர் ராஜ்மோகன்! 

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட...

பிளாஸ்ட் சினிமா விமர்சனம்

சாதாரண கராத்தே மாஸ்டர் குடும்பத்துக்கும் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக மலைக் கிராமம் ஒன்றை ஒட்டுமொத்தமாக பலிகொடுக்க தயாராகும் கார்ப்பரேட்...

More like this