HomeCinemaவிதார்த், ஜனனி நடிக்கும் ஹைபர் லிங்க் கதையில் அமைந்த திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

விதார்த், ஜனனி நடிக்கும் ஹைபர் லிங்க் கதையில் அமைந்த திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

Published on

விதார்த், ஜனனி, எம்.எஸ்.பாஸ்கர், சரவணன், பப்லு பிரித்விராஜ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஷாரிக் ஹாசன், விகாஸ், மகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடந்தது. படத்தை குவியம் பிலிம்ஸ் லால்குடி எம்.ஹரிஹரன் தயாரிக்க, கிருஷ்ணா குமார் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

படம் குறித்து கிருஷ்ணா குமார் பேசியபோது, ”நாம் செய்த தவறு எந்த காலத்திலும் நம்மை விடாது. எதாவது ஒரு வழியில் நம்மை வந்து சேரும் என்ற கதையை, ஹைபர் லிங்க் நான் லீனியர் பாணியில் திரைக்கதை அமைத்து இருக்கிறேன். இதுவரை யாரும் சொல்லாத வகையில் வித்தியாசமாக ஒன்றை முயற்சி செய்ய இருக்கிறோம். சஸ்பென்ஸ் திரில்லர், டிராமா, காதல் ஆகிய மூன்று கதைகளாக திரைக்கதை நகர்ந்து ஒரே புள்ளியில் கதை முடியும். ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கி 35 நாட்கள் தொடர்ந்து நடத்த இருக்கிறோம்” என்றார்.

வெற்றி பெற்ற பல தமிழ்ப் படங்களுக்கு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை செய்து வந்த குவியம் ஸ்டுடியோஸ் நிறுவனம், தற்போது குவியம் பிலிம்ஸ் என்ற பெயரில் பட தயாரிப்பில் இறங்கியுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவிருக்கிறது.

படக்குழு: பாடல்களை கார்த்திக் நேத்தா எழுத, லால்குடி எம்.ஹரிஹரன் இசையமைக்கிறார். கோவிந்த்.நா படத்தொகுப்பு செய்ய பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

Latest articles

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு!

துல்கர் சல்மான் நடித்துள்ள 'ஐ ஆம் கேம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த படம் சுமார் 11 மாதங்கள்...

சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ படத்தின் டைட்டில் லுக் வெளியானது!

சந்தீப் கிஷன் - கிருஷ்ண சைதன்யா- விஜய் சில்லா -சசி தேவி ரெட்டி- 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் -...

கதையின் நாயகனாக விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் அறிமுக விழா! 

விக்கல்ஸ் விக்ரம் ஸ்டாண்ட் அப் காமெடியன் - பிக் பாஸ் பிரபலம் - டிஜிட்டல் திரை நட்சத்திரம் என...

திட்டக்குடியில் திருவிழா கொண்டாட்டம் – TN 2026′ மூலம் மீண்டும் வெற்றி கண்ட கண்ணன் ரவி & தீபக் ரவி!

KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக்...

More like this