HomeCinemaநல்லாசிரியர் விருது பெறும் நேரத்தில் எதிர்பாராத திருப்பங்கள்... ஜே எஸ் கே முக்கிய வேடத்தில் நடிக்கும்...

நல்லாசிரியர் விருது பெறும் நேரத்தில் எதிர்பாராத திருப்பங்கள்… ஜே எஸ் கே முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘குற்றம் கடிதல் 2’ படத்திலிருக்கும் பரபரப்பு.

Published on

ஜே.எஸ்.கே. விநியோகம், தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என திரையுலகின் பல்வேறு துறைகளில் ஆளுமையாக இயங்கி வருபவர். தற்போது ‘குற்றம் கடிதல் 2’ படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார்.

2015ம் ஆண்டு திரைக்கு வந்து தேசிய விருது உள்ளிட்ட அங்கீகாரங்களையும் பெரும் வரவேற்பையும் பெற்ற ஜே எஸ் கே தயாரிப்பில் உருவான‌ ‘குற்றம் கடிதல்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எஸ் கே ஜீவா எழுதி இயக்குகிறார். ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் இப்படத்தை தயாரிக்கிறது.

ஆர் பார்த்திபன் நடித்த ‘புதுமை பித்தன்’, கார்த்திக் நடித்த ‘லவ்லி’ படங்களை இயக்கிய ஜீவா, ‘அழகிய தமிழ் மகன்’, சமீபத்தில் வெளியான ‘அநீதி’, ஜே எஸ் கே இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஃபயர்’ உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆவார். ‘அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்தின் கதையும் இவருடையது என்பது குறிப்பிடத்தக்கது. வசந்தபாலன் இயக்கத்தில் ஜி5 ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ள ‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடரின் வசனங்களையும் இவர் எழுதியுள்ளார்.

படம் பற்றி ஜே எஸ் கே பேசும்போது, “ஜீவாவின் ஸ்கிரிப்ட் என்னை மிகவும் கவர்ந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த கதை உருவாகிறது. இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையான ஒரு கருத்தை சொல்லும் இந்த திரைப்படம், மக்களின் கவனத்தை ஈர்த்து அவர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்து பெரும் வெற்றி பெறுவதோடு, தேசிய விருதுகளையும் வெல்லும். ஜீவாவின் திரைப்பயணத்தில் ‘குற்றம் கடிதல் 2’ ஒரு மைல்கல்லாக இருக்கும்.

கொடைக்கானல் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 60 வயது ஆசிரியராக நடிக்கிறேன். ஓய்வு பெறும் சமயத்தில் குடியரசுத் தலைவர் கரங்களால் நல்லாசிரியர் விருது வாங்கும் நேரத்தில் அவரது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சம்பவங்களை தொகுத்து இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது.

‘குற்றம் கடிதல் 2’ படத்தின் படப்பிடிப்பு ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கி கொடைக்கானல், திண்டுக்கல், சென்னை மற்றும் கேரளாவில் நடைபெறும்” என்றார்.

படக்குழு:- ‘குற்றம் கடிதல் 2’ படத்திற்கு ‘அம்புலி’ மற்றும் ‘ஃபயர்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த‌ சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டிங்கை ‘குற்றம் கடிதல்’ படத்தொகுப்பாளரான சிஎ ஸ் பிரேம் குமார் கையாள்கிறார். ‘ஃபயர்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் டி கே இப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகவும் திறமைவாய்ந்த இளம் இசை அமைப்பாளரான இவர் விரைவில் முன்னணிக்கு வருவார் என்று ஜே எஸ் கே கூறினார். சிந்து கிராஃபிக்ஸ் பவன் வடிவமைப்புகளையும். மக்கள் தொடர்பை நிகில் முருகனும் கவனிக்கின்றனர்.

Latest articles

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

https://www.youtube.com/watch?v=jKEjOHlUAdo சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் இணைந்து நடிக்கும் “குட் நியூஸ்”...

ஜெயராம் –அஷ்வின் நடிக்கும் குட் நியூஸ் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

https://www.youtube.com/watch?v=jKEjOHlUAdo சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் இணைந்து நடிக்கும் “குட் நியூஸ்”...

விக்கல்ஸ் விக்ரம் – ஆரத்தி கிருஷ்ணா நடிக்கும் லைட் வெயிட் பேபி படத்தின் படப்பிடிப்பு நிறைவு… ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! 

ஸ்டாண்ட் -அப் காமெடியன் 'விக்கல்ஸ்' விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆரத்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும்...

More like this