HomeCinemaகுற்றப்பரம்பரை அரசியலை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதிய ஆகோள் நாவல் ஆங்கிலத்தில் வெளியானது

குற்றப்பரம்பரை அரசியலை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதிய ஆகோள் நாவல் ஆங்கிலத்தில் வெளியானது

Published on

1920 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராகப் போராடி பதினாறு பேர் உயிர் தியாகம் செய்தனர். அந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதி 2022 ஆம் ஆண்டு வெளிவந்த ஆகோள் என்ற நாவல் தற்போது ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. பிரபல பதிப்பகமான ரூபா நிறுவனம் இந்த நூலைப் பதிப்பித்திருக்கிறார்கள்.

தற்காலத்தின் மெய்நிகர் தொழில்நுட்பம், சைபர் செக்யூரிட்டி மற்றும் பெருந்தரவு கொள்ளை ஆகியவைகளைக் களமாகக் கொண்ட நாவலில் நூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பெருங்காமநல்லூர் போராட்டம் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கபிலன்வைரமுத்து தமிழில் எழுதிய இந்த நாவல் மீரா ரவிஷங்கரின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து கபிலன்வைரமுத்து பேசும்போது “ஆகோள் ஒரு படைப்பு அல்ல. ஒரு பயணம். அது தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு செல்வதில் மகிழ்ச்சி. மொழி,தேசம், பண்பாடு தாண்டி அனைவரும் முகம் பார்க்கும் ஒரு படைப்பாக இந்த நாவலைக் கருதுகிறேன். இந்த களத்தில் எழுதுவதற்கு இன்னும் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆகோள் நாவலின் இரண்டாம் பாகத்திற்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். விரைவில் எழுத்துப்பணிகளைத் தொடங்கவிருக்கிறேன். ரூபா பதிப்பதகத்திற்கும் மொழி பெயர்த்த மீரா ரவிஷங்கர் அவர்களுக்கும், மிஸ்டிக்ஸ் ரைட் மொழிபெயர்ப்பு நிறுவனத்திற்கும் என் நன்றி” என்றார்.

Latest articles

பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!

Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் இர்ஃபானா ஹமீத், பெண்களின்...

இரா.சரவணன் இயக்கத்தில் அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2.’

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது...

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

More like this