HomeCinemaகோடைகாலத்தில் திரைக்கு வர தயாராகும் தசரா கூட்டணியின் அடுத்த படத்தின் அசத்தல் போஸ்டர் வெளியீடு!

கோடைகாலத்தில் திரைக்கு வர தயாராகும் தசரா கூட்டணியின் அடுத்த படத்தின் அசத்தல் போஸ்டர் வெளியீடு!

Published on

நடிகர் நானி இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இணைந்த, காதல் ஆக்ஷன் டிராமா ஜானரில் வெளியான தசரா திரைப்படம் கடந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக மாறியது. நானி நடிப்பில் வெளியாகி அதிக வசூல் செய்த படமாகவும் அமைந்தது. இந்த நிலையில், அதே தசரா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

நானி 33 என தற்காலிக தலைப்புடன் துவங்கப்பட்டிருக்கும் இந்த படத்தை ஸ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ்’ சுதாகர் செருக்குரி தயாரிக்கிறார். தற்காலிகமாக நானி 33 என பெயரிட்டுள்ள இந்த படம் அடுத்தாண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

தசரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஸ்ரீகாந்த் ஒடேலா, முதல் படத்திலேயே அதிக வசூலை குவித்து நல்ல வரவேற்பை பெற்றார். தனது முதல் படத்திலேயே நானியை இதுவரை யாரும் பார்த்திராத அளவுக்கு வித்தியாசமாக வெளிப்படுத்தி இருந்தார்.

புதிய படம் தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரில் ரத்தம் தெறிக்க சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் நானியின் முகம் மாசாக காட்சியளிக்கிறது. இத்துடன் அவர் சிகரெட் பிடிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான போஸ்டரில், தலைவராக இருக்க அடையாளம் தேவையில்லை என்ற வாசகம் இடம்பெற்று இருக்கிறது.

முதல் போஸ்டரில் இருந்தே அடுத்த படம் ரத்தம் தெறிக்கும் வகையில் ஆக்ஷன் கதைக்களம் கொண்டிருக்கும் என்பதை படக்குழு தெரியப்படுத்தி இருக்கிறது. ஸ்ரீகாந்த் தனது அடுத்த படத்திலும் நானியை சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் காட்சிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படக்குழு:
இயக்குனர்: ஸ்ரீகாந்த் ஒடேலா
தயாரிப்பாளர்: எஸ்.எல்.வி.சினிமாஸ் சுதாகர் செருக்குரி
மார்கெட்டிங்: பர்ஸ்ட் ஷோ
பி.ஆர்.ஓ: சதீஸ்குமார்

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this