HomeCinemaஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'வளையம்' பட பூஜையில் பங்கேற்ற விஜய் சேதுபதி!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘வளையம்’ பட பூஜையில் பங்கேற்ற விஜய் சேதுபதி!

Published on

ஐஸ்வர்யா ராஜேஷ், புதுமுகம் தேவ் நடிக்கும் அதிரடி த்ரில்லர் படத்திற்கு ‘வளையம்’ என பெயரிடப்பட்டுள்ளது. மனோ பாரதி இயக்க, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி. டில்லி பாபு தயாரிக்கிறார்.

சேத்தன், தமிழ், பிரதீப் ருத்ரா, ஹரிஷ் பேராடி மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோருடன் இன்னும் சில முக்கிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் பூஜை நிகழ்வில் தயாரிப்பாளர் ஜி டில்லி பாபு பேசியபோது,​​”சமூகத்துக்குத் தேவையான தரமான, நல்ல கருத்துள்ள படங்கள் மற்றும் பொழுதுபோக்கு கதைகளை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும் என்ற தெளிவான பார்வையுடன் பயணித்து வருகிறோம். இந்த 10 வருடங்களில் நல்ல படங்களை உருவாக்க முடிந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு ஆதரவு கொடுத்தத் திரையுலக நண்பர்கள், பத்திரிகை ஊடகங்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கு எனது நன்றி. அனைவருக்கும் சிறந்த சினிமா அனுபவத்தை வழங்கும் எங்களின் அடுத்தப் புதிய படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ஆர். வேல்ராஜின் முன்னாள் உதவியாளரான மகேந்திர எம். ஹென்றி படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் புகழ் பெற்ற பூபதி படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

‘லிஃப்ட்’ படப்புகழ் மைக்கேல் பிரிட்டோ படத்திற்கு இசையமைக்கிறார். கலை இயக்கத்தை பிரதீப் கவனித்துக் கொள்வார். அவர் முன்பு பல்வேறு விளம்பரங்களில் பணிபுரிந்துள்ளார். நல்ல கதையம்சத்துடன் இத்தகைய திறமையான குழுவும் இணைவதால் படம் நிச்சயம் பார்வையாளர்களை கவர்வது உறுதியாகிறது.

Latest articles

வெள்ளித்திரை – சின்னத்திரை- தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

மனதுக்கு இதம் தரும் ‘வானே வானே…’ துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=5r7Q5jS2gas பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான்-  அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் தனது 41வது திரைப்படத்தின்...

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா, வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்களும் இதில் உண்டு....

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

More like this