HomeCinemaஎம். ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா, அதிதி ஷங்கர்! 'ஸ்ரீவாரி பிலிம்' ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிறது.

எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா, அதிதி ஷங்கர்! ‘ஸ்ரீவாரி பிலிம்’ ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிறது.

Published on

அதர்வா முரளி, அதிதி ஷங்கர், இயக்குநர் எம். ராஜேஷ் இணையும் படத்தை ‘ஸ்ரீவாரி பிலிம்’ பி.ரங்கநாதன் தயாரிக்கிறார். படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

படம் குறித்து இயக்குநர் எம். ராஜேஷ் பேசியபோது, ​​“காலத்திற்கு ஏற்றாற் போல, சினிமாவின் ஒவ்வொரு ஜானரிலும் மாற்றம் ஏற்படும். இருப்பினும், தமிழ் சினிமா ரசிகர்கள் எண்டர்டெயினர் படங்களை ஒருபோதும் கொண்டாடத் தவறியதில்லை. பார்வையாளர்கள் திரையரங்குகளில் அவர்களை மகிழ்விக்கும் இதுபோன்றத் தருணங்களை என் படங்களில் கொடுக்க எனக்கு இடம் கொடுத்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய பி. ரங்கநாதன் சாருக்கும், கதையில் நடிக்க ஒத்துக் கொண்ட அதர்வா முரளி சாருக்கும் நன்றி. இந்தப் படம் மூலம் ரசிக்கத்தக்க பொழுதுபோக்குப் படத்தைக் கொடுக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

அதர்வா முரளி பேசியபோது, ​​“திரையுலகில் மிகுந்த அனுபவமும் கொண்ட பி.ரங்கநாதன் சார் போன்ற சிறந்த தயாரிப்பாளருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தரமான பொழுதுபோக்கு கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும், ஊக்குவிப்பதிலும், அதற்காக செலவு செய்வதிலும் அவருடைய ஈடுபாடு அபாரமானது. இயக்குநர் ராஜேஷின் திரைக்கதைக்கு இவர் தயாரிப்பு செய்து அதில் நான் நடிப்பது பெருமையான விஷயம். முழுக்க முழுக்க எண்டர்டெய்ன்மெண்ட் படங்களை எதிர்பார்த்து திரையரங்குகளுக்கு வருபவர்களை இந்தப் படம் நிச்சயம் ஏமாற்றாது” என்றார்.

தயாரிப்பாளர் பி.ரங்கநாதன், ​​“இத்தனை வருடங்களில் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் நான் கவனித்த வரையில் எண்டர்டெயினர் படங்களைத் தமிழ் ரசிகர்கள் நிபந்தனையின்றி கொண்டாடுவதை நேரில் பார்த்திருக்கிறேன். அவர்களின் 2-3 மணிநேர சினிமா அனுபவத்தை முற்றிலும் ரசிக்க வைக்கும் ஒரு கண்ணியமான பொழுதுபோக்கு படத்தை அவர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையிலான படம்தான் இது. அதர்வா முரளி தனது அர்ப்பணிப்பு மற்றும் திறமையான நடிப்பிற்காகப் பெயர் பெற்றவர். இந்தப் படம் ஒரு பொழுதுபோக்குப் படமாக வித்தியாசமான பரிமாணத்தில் அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும். அனைத்து வயதினரையும் கவரும் வகையில் ஒரு திரைக்கதையை ராஜேஷ் உருவாக்கியுள்ளார். பல திறமைகள் மற்றும் சிறந்த நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அதிதி ஷங்கருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது ஜெயம் ரவியின் படப்பணியில் ராஜேஷ் பிஸியாக இருக்கிறார். அது முடிந்ததும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்கவிருக்கிறோம்” என்றார்.

Latest articles

வெள்ளித்திரை – சின்னத்திரை- தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

மனதுக்கு இதம் தரும் ‘வானே வானே…’ துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=5r7Q5jS2gas பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான்-  அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் தனது 41வது திரைப்படத்தின்...

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா, வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்களும் இதில் உண்டு....

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

More like this