HomeCinemaகல்லூரி மாணவர்களை குறி வைத்து எடுக்கப்பட்ட படம் இது! -போர்' பட விழாவில் இயக்கிய பிஜோய்...

கல்லூரி மாணவர்களை குறி வைத்து எடுக்கப்பட்ட படம் இது! -போர்’ பட விழாவில் இயக்கிய பிஜோய் நம்பியார் பேச்சு 

Published on

அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம் ‘போர்.’

சைத்தான், டேவிட், வாஷிர், ஷோலோ படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்க்கியுள்ள இந்த இந்த படம் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் வரும் மார்ச் 1 முதல் வெளியாகவிருக்கிறது. முன்னதாக படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு இன்று சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் பிஜோய் நம்பியார் பேசியபோது, ”இந்த படம் முழுமையான தமிழ்ப்படம். இதில் நடித்திருக்கும் முக்கிய நடிகர்கள் மற்றும் துணை நடிகர்கள் அனைவருமே தமிழ் தெரிந்தவர்கள்.

இது கல்லூரிk கால வாழ்க்கை தொடர்பான படம். எனக்கு எப்போதுமே கல்லூரி தொடர்பான கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் உண்டு. இப்படம் முழுக்க முழுக்க குறிப்பாக கல்லூரி செல்லும் இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

முதலில் இப்படத்தை மலையாளத்தில் எடுக்க வேண்டும் என்று தான் எண்ணினேன். பிறகு தமிழ் மற்றும் இந்தியில் எடுத்தால் சரியாக இருக்கும் என்று தோன்றியது. எனக்கு எப்போதும் தமிழ் வார்த்தைகளின் மீதும் அந்த ஒலி வடிவங்கள் மீதும், தமிழ் மொழியின் மீதும் ஒரு மயக்கம், காதல் உண்டு. இப்படத்தில் தமிழ் வடிவத்திற்கான வசனங்கள் மிகுந்த கவித்துவத்துவத்துடன் வந்திருப்பதாகத் தோன்றுகிறது.

போர் திரைப்படத்திற்காக எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு நல்கிய நடிகர் நடிகைகள் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் ஒரு படத்தை உருவாக்கும் போது நடிகர் நடிகைகளுக்கான சிக்கல்கள் அதிகம். அதைப் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்த நடிகர் நடிகைகளுக்கும் எங்கள் தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றிகள்.

இரண்டு மொழிகளிலும் இப்படம் எடுக்கப்பட்டாலும் கதையில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு மொழிகளிலும் ஒரே கதை தான். அர்ஜூன் தாஸை நான் தான் ஹிந்திக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கின்ற தேவை இல்லை. அவர் ஏற்கனவே ஹிந்தி திரைப்படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். அர்ஜூன் தாஸுக்கு சண்டைக் காட்சியில் அடிபடும் போது நாங்கள் பாண்டிச்சேரியில் சூட்டிங்கில் இருந்தோம். அடிபட்டவுடன் சூட்டிங்கை நிறுத்திவிட்டு, சென்னை சென்றுவிடுவோம், ஒரு நாள் அவர் ஓய்வில் இருக்கட்டும், பின்னர் சூட்டிங்கை துவங்குவோம் என்று தான் முடிவு செய்தோம். ஆனால் அவர் என்னிடம் வந்து தனியாகப் பேசினார். சூட்டிங்கை நிறுத்தினால் தேவையில்லாத பண இழப்புகள் தோன்றும். எனக்கு ஒன்றும் பெரிய அடியில்லை; சூட்டிங்கை முடித்துவிட்டுத் தான் செல்கிறோம் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அவரது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு என்னை பிரமிக்க வைக்கிறது.

போர் கல்லூரி தொடர்பான கதை என்றாலும் கூட ஏன் போர் என்கின்ற தலைப்பை தேர்வு செய்தோம் என்பது சுவாரஸ்யமானது. “பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, ஒரு போர்க்களக் காட்சியில் சண்டைக்காட்சி இயக்குநர் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக வந்த தெலுங்கு நடிகர் நடிகைகளிடம் மைக்கில் ‘இது போர், போர், போர்” அந்த முகபாவனையுடன் நில்லுங்கள், இது போர் போர்” என்று சத்தமாகக் கத்திக் கொண்டிருந்தார். எனக்கு அது மனதில் பதிந்துவிட்டது. உடனே என் நண்பரைக் கூப்பிட்டு அந்த டைட்டிலை பதிவு செய்யச் சொன்னேன். இரண்டு எதிர் எதிர் கதாபாத்திரத்தின் யுத்தத்திற்கு போர் என்கின்ற தலைப்பு சரியாக இருக்கும் என்று தோன்றியது” என்றார்.

நாயகன் அர்ஜூன் தாஸ் பேசியபோது, ”இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த பிஜோய் நம்பியார் அவர்களுக்கு என் முதல் நன்றி. எனக்கு இப்படத்தின் கதையை ஒரு ஹோட்டலில் வைத்து தான் சொன்னார். அதற்கு முன்னரே காளிதாஸ் படத்தில் புக் ஆகி இருந்தார். படப்பிடிப்பின் போது இயக்குநர் எங்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். பொதுவாக இரு மொழிகளில் ஒரு படத்தின் சூட்டிங் போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு மொழியில் நடிப்பவர்களுக்கு பிற மொழியில் எடுக்கப்பட்ட காட்சிகளைக் காட்டமாட்டார்கள். ஆனால் பிஜோய் எங்களுக்கு அதையும் காட்டிவிட்டு இயல்பாக நடிக்கச் சொன்னார். படத்தில் எங்கள் அனைவருக்கும் பேருதவியாக இருந்த உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. காளிதாஸ் சூட்டிங்கில் இருப்பதால் இங்கு வர முடியவில்லை. அவருக்காக நான் உங்களிடம் மன்னிப்பும் நன்றியும் கேட்டுக் கொள்கிறேன்.

போர் திரைப்படம் ஒரு கல்லூரி கால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். கொண்டாட்டத்திற்கான திரைப்படம், நட்பும் படத்தில் சிறிய அளவில் இருக்கிறது. வேறு வேறு விதத்திலான உணர்வுகள் படத்தில் கொட்டிக்கிடக்கிறது.

காளிதாஸ் ஜெயராமுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் படப்பிடிப்பு தளத்தில் டேக் செல்வதற்கு முன்பு வரை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான். ரொம்பவே சேட்டை செய்வான். மற்றபடி மிகச்சிறந்த நண்பன். காளிதாஸ் உடன் சேர்ந்து நடித்த அனுபவம் மகிழ்ச்சியானது” என்றார்.

நாயகி சஞ்சனா நடராஜன் பேசியபோது, ”ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரையில் பார்க்காத சஞ்சனாவை இந்த படத்தில் பார்ப்பீர்கள் என்று உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்” என்றார்.

நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் Roox Media மது அலெக்ஸ், மெர்வின் ரொஸாரியோ,நடிகை டி.ஜே.பானு உள்ளிட்டோரும் பேசினார்கள்.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...