HomeGeneralபுதிய தலைமுறையின் சக்தி விருது விழாவிற்காக பரபரப்பாக தயாராகும் சென்னை நந்தம்பாக்கம் உலக வர்த்தக மையம்!

புதிய தலைமுறையின் சக்தி விருது விழாவிற்காக பரபரப்பாக தயாராகும் சென்னை நந்தம்பாக்கம் உலக வர்த்தக மையம்!

Published on

உண்மை உடனுக்குடன் என்ற தாரக மந்திரத்துடன் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு நமது புதிய தலைமுறை செய்தி அலைவரிசை ஊடகப் பணியாற்றி வருகிறது. செய்திப் பணியையும் தாண்டி மக்கள் பணியாற்றுவதை கடமையாக கொண்டிருக்கும் புதியதலைமுறை இந்த சமூகத்திற்கு தொண்டாற்றும் ஆளுமைகளை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரிக்கும் விதமாக தமிழன் விருதுகள், சக்தி விருதுகள் மற்றும் ஆசிரியர் விருதுகள் என்று ஆண்டுதோறும் மூன்று விதமாக விருது விழாக்களை நடத்தி சிறப்பு செய்து வருகிறது.

சமூகம் தழைக்க பெண்கள் ஆற்றும் பங்கினை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் வகையில் ஆறு பிரிவுகளில் சிறந்த விளங்கும் பெண் ஆளுமைகளுக்கு சக்தி விருதுகள் #sakthiawards வழங்கப்பட்டு வருகின்றன. தலைமை, திறமை, துணிவு, புலமை, கருணை மற்றும் வாழ்நாள் சாதனை என்ற ஆறு தலைப்புகளில் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகளுக்கான பரிந்துரைகள் நடுவர் குழுவினரால் ஆய்ந்து அதிலிருந்து சிறந்தவர்கள் இந்த ஆண்டுக்கான விருதாளர்களாள தேர்வு செய்யப்படுகின்றனர்.

தேர்வு செய்யப்படும் விருதாளர்கள் பிப்ரவரி 17 சனிக்கிழமை மாலை சென்னையில் நடைபெறும் விழாவில் விருதுகளை பெற இருக்கின்றனர்.

வண்ணமிகு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் நடக்க இருக்கும் சக்தி விருது விழா நிகழ்ச்சி மார்ச் எட்டாம் நாள் உலக மகளிர் நாள் அன்று நமது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக இருக்கிறது.

சென்னை நந்தம்பாக்கம் உலக வர்த்தக மையத்தில் மாலை ஆறுமணியளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர்கள், தொழில்முறை வல்லுநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் திரைப்படக் கலைகஞர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Latest articles

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி - இயக்குநர் பாபி கொல்லி - கே வி என் புரொடக்ஷன்ஸ்-  கூட்டணியில் தயாராகும்'...

இளைஞர்களின் காதல் வாழ்க்கையை புதுமையாக பேசும் ‘யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

https://www.youtube.com/watch?v=OrIqzmpg04k AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில்,...

காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24-ம் தேதி வெளியாகிறது!

MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை வழங்குகிறது. அனைவரது கவனத்தையும் கவரும் வகையில்...

முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு இயக்குநர் சீனு ராமசாமியின் கோரிக்கை!

எழுத்தாளர், இயக்குநர் என பல தளங்களில் இயங்கி வருபவர்  சீனு ராமசாமி. சமீபத்தில் இவர் எழுதிய 'சினிமாவின் ஆன்மா'...

More like this