HomeCinemaஅதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை இயக்கும் விஷ்ணுவர்தன்! ஹீரோயினாக இணைந்த அதிதி...

அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை இயக்கும் விஷ்ணுவர்தன்! ஹீரோயினாக இணைந்த அதிதி ஷங்கர்.

Published on

இயக்குநர் விஷ்ணு வர்தன் ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் ஈர்த்தபின், தேசிய விருது பெற்ற ‘ஷெர்ஷா’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் முத்திரை பதித்தார்.அடுத்ததாக சல்மான் கானுடன் இணைந்துள்ளார். இது அவரின் சினிமா பயணத்தில் அடுத்த மைல்கல்.

அதையடுத்து விஷ்ணு வர்தன் மனதைக் கவரும் ரொமாண்டிக் என்டர்டெய்னர் மூலம் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வருகிறார். திரையில் தனது ஹீரோக்களின் வசீகரத்தை மேம்படுத்துவதில் விஷ்ணு வர்தன் பெயர் பெற்றவர். அந்த மேஜிக்கை இப்போது மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வா முரளியின் தம்பியுமான ஆகாஷ் முரளிக்கு கொடுக்கவுள்ளார்.

ஆம், அவரது புதிய படத்தில் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார்.  படப்பிடிப்பு போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் உள்ள பல்வேறு நகரங்களில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்தியாவில் பெங்களூரு மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. தமிழில் விஷ்ணு வர்தனின் கம்பேக் படமான இது அழகான காதல் கதையாக இருக்கும்.

படத்தில் அதிதி ஷங்கர், சரத் குமார், பிரபு கணேசன், குஷ்பு சுந்தர், கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோவுடன் சினேகா பிரிட்டோ இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு முத்துராமலிங்கம் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விஷ்ணு வர்தன் ஆகியோர் இணைந்து முன்பு பணிபுரிந்த படங்களின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இப்போது அந்தக் கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். கேமரூன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஃபெடரிகோ கியூவா ஆக்‌ஷன் காட்சிகளை இயக்க, அனு வர்தன் ஆடைகளை வடிவமைக்கிறார். தினேஷ் பாடல்களுக்கு நடனம் அமைக்கிறார்.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this