HomeCinemaபத்திரிகையாளர் ஜியா இயக்கிய ‘எனக்கொரு WIFE வேணுமடா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட...

பத்திரிகையாளர் ஜியா இயக்கிய ‘எனக்கொரு WIFE வேணுமடா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இயக்குநர் சீனு ராமசாமி!

Published on

பத்திரிகை துறையில் 22 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஜியா உல் ஹக் என்கிற ஜியா இயக்கியுள்ள இரண்டாவது குறும்படத்துக்கு ‘எனக்கொரு WIFE வேணுமடா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

‘கள்வா’ என்ற ரொமான்டிக் திரில்லர் குறும்படத்தை கடந்த ஆண்டு இயக்கிய ஜியா, இப்போது புது படைப்புடன் வந்துள்ளார். பிலிம் வில்லேஜ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அமோகன் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார். இந்த குறும்படம் ஹியூமர் டிராமாவாக உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த குறும்படம் வெளியாக உள்ளது. இந்த படம் மூலம் ஜியா இசையமைப்பாளராகவும்அறிமுகம் ஆகிறார்.

இந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக்கை பிரபல இயக்குனர் சீனு ராமசாமி எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டார்.

‘நித்தம் ஒரு வானம்’, சமீபத்தில் வெளியான ‘செவப்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் செபாஸ்டின் அந்தோணி இதில் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயின்களாக அக்‌ஷயா, அனகா, வினிதா, மவுனிகா நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம் – ஜியா. ஒளிப்பதிவு – அபிஷேக். படத்தொகுப்பு – பிரசாத் ஏ.கே. தயாரிப்பு – அமோகன். இசை வடிவமைப்பு – மிதுன். ஒலிப்பதிவு – கோகுல் ராஜசேகர். மேக்அப் – பவித்ரா. பிஆர்ஓ – டீம் ஏய்ம் சதீஷ்

Latest articles

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...

’விட்ரா மச்சா…’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!

தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும்...

More like this