HomeUncategorized'தூக்குதுரை' சினிமா விமர்சனம்

‘தூக்குதுரை’ சினிமா விமர்சனம்

Published on

காமெடி பேய்ப் படங்களுக்கான வழக்கமான டெம்ப்ளேட்டில் மற்றுமொரு படைப்பு.

அந்த கிராமத்தில் மன்னர் வழிவந்த குடும்பத்து வாரிசுகளிடம் ஒரு தங்க கிரீடம் இருக்கிறது. திருவிழா நாளில் மக்கள் தரிசிப்பதற்காக கிரீடத்தை வெளியில் எடுப்பது வழக்கம். இடையில் இருபது வருடங்களாக திருவிழா நடத்த முடியாமல் போகிறது.

அந்த கிரீடத்தை ஒருநாள் சிலர் திருடிக் கொண்டு ஓடும்போது அது விழுந்து உடைகிறது. உடைந்த கிரீடம், தான் தங்கமல்ல; போலி என்பதை காட்டிக் கொடுக்கிறது. ஊரே அதிர்கிறது.

இப்படி கதையின் ஒருபாதி கடந்தோட அந்த ஒரிஜினல் கிரீடம் என்னவானது? எங்கு போனது? என்பதையெல்லாம் மறுபாதியில் பார்க்க முடிகிறது.

கதையை 1999 காலகட்டத்திலும் நிகழ்காலத்திலும் நடக்கும் விதமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்

திருவிழாக்களில் திரை கட்டி படம் போடுகிற வேலை செய்கிற யோகிபாபு, மன்னர் குடும்பத்து வாரிசான இனியா மீது காதல் கொள்வது, தொடை நடுங்கியான தன்னை நம்பி வந்த இனியாவுடன் ஊரை விட்டு ஓட முயற்சிப்பது, ஊராரின் தாக்குதலுக்கு ஆளாவது, பேயாக சுற்றித் திரிந்து ஊர் மக்களின் உறக்கத்தைக் கெடுப்பது என தனது கலகலப்போடும் கதையின் தேவைக்கேற்ப கச்சிதமாகவும் தன் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்.

வளமையான தேகம், வசீகர சிரிப்பு என வலம் வருகிற இனியா சில காட்சிகளில் மட்டும் துடிப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.

மொட்டை ராஜேந்திரனிடம் திருட்டுத் தொழில் பயிற்சி பெற்று, கிரீடத்தை திருட வந்து எதிர்பாராத பிரச்சனையில் சிக்கித் தவிக்கிற மகேஷ், பால சரவணன், சென்றாயன் குழுவினரின் காமெடி கலாட்டாக்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம்.

மொட்டை ராஜேந்திரன், பேய் வசிக்கும் கிணற்றுக்குள் இறங்கி படும் அவஸ்தைகள் கொஞ்சமே கொஞ்சம் ரசிக்க வைக்கின்றன.

சென்றாயன், இயக்குநர் மாரிமுத்து என தேர்ந்த நடிகர்களும் படத்தில் உண்டு.

கே.எஸ். மனோஜின் பின்னணி இசையும், ரவி வர்மாவின் ஒளிப்பதிவும் கச்சிதம்.

கதையை சற்றே பலப்படுத்தி, திரைக்கதையில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தியிருந்தால் ‘தூக்கு துரை’க்கு மதிப்பெண்ணை தூக்கலாய் போட்டிருக்கலாம்.

Latest articles

தமிழ் தூதர் தனிநாயகம் அடிகளார் ஆவணப்படம் வெளியீடு 

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் (Unformula Films) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், 'நேஷனல் கிரஷ்' ராஷ்மிகா மந்தானா...

தேசிய விருது வென்ற தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் இருவரும் ‘மார்கோ’ புகழ் உன்னி முகுந்தனுடன் இணையும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம்!

குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டுடியோஸ், ‘மார்கோ’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர்...

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

நடிகை நிதி அகர்வால் தனது திரைப்பயணத்தின் முக்கியமான கட்டத்தில் நுழைந்துள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல...

More like this

தமிழ் தூதர் தனிநாயகம் அடிகளார் ஆவணப்படம் வெளியீடு 

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் (Unformula Films) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், 'நேஷனல் கிரஷ்' ராஷ்மிகா மந்தானா...

தேசிய விருது வென்ற தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் இருவரும் ‘மார்கோ’ புகழ் உன்னி முகுந்தனுடன் இணையும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம்!

குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டுடியோஸ், ‘மார்கோ’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர்...
காமெடி பேய்ப் படங்களுக்கான வழக்கமான டெம்ப்ளேட்டில் மற்றுமொரு படைப்பு. அந்த கிராமத்தில் மன்னர் வழிவந்த குடும்பத்து வாரிசுகளிடம் ஒரு தங்க கிரீடம் இருக்கிறது. திருவிழா நாளில் மக்கள் தரிசிப்பதற்காக கிரீடத்தை வெளியில் எடுப்பது வழக்கம். இடையில் இருபது வருடங்களாக திருவிழா நடத்த முடியாமல் போகிறது. அந்த கிரீடத்தை ஒருநாள் சிலர் திருடிக் கொண்டு ஓடும்போது அது விழுந்து உடைகிறது. உடைந்த கிரீடம், தான் தங்கமல்ல;...'தூக்குதுரை' சினிமா விமர்சனம்