HomeCinemaஇயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், கரு. பழனியப்பன் வெளியிட்ட ‘அரிமாபட்டி சக்திவேல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், கரு. பழனியப்பன் வெளியிட்ட ‘அரிமாபட்டி சக்திவேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Published on

இயக்குநர் கரு பழனியப்பனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ரமேஷ் கந்தசாமி இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘அரிமாபட்டி சக்திவேல்.’

சமூகத்தின் மறுபக்கத்தை ஏற்றத்தாழ்வுகள் மிக்க மனிதனின் முகத்தை தோலுரித்து காட்டும் படைப்பாக உருவாகியுள்ள இந்த படத்தில், சார்லி முக்கிய வேடத்தில் நடிக்க, நாயகனாக புதுமுகம் பவன் கே நடிக்கிறார். நாயகியாக மலையாள நடிகை மேகனா எலேன், இமான் அண்ணாச்சி, Super good சுப்ரமணி, கராத்தே வெங்கடேஷ், Hello கந்தசாமி, பிர்லா போஸ், அழகு, செந்தி குமாரி உட்பட மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி இயக்குநர்கள் கே எஸ் ரவிக்குமார், கரு பழனியப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இணைந்து வெளியிட்டனர்.

திருச்சி அருகே ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமமே தங்களுக்கு என்று ஒரு கட்டுப்பாட்டை வரையறுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த ஊரில் உள்ள ஒருவன் அந்த கட்டுப்பாட்டை மீறும்போது நாயகனுக்கும் ஊருக்கும், நடக்கும் வாழ்வியல் போராட்டங்களை மையக்கருவாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.

அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய, அம்பேத்கரும், பெரியாரும் இன்னும் மாறாத சமூகத்தை பரிதாபத்துடன் கவனிக்கும் குறியீடாக, சிறைக்கம்பிகளுக்கு வெளியில் நின்று, கிராமத்தின் பஞ்சாயத்தை கவனித்து பார்க்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், படம் சொல்ல வரும், கருத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திவிடுகிறது. மாறுபட்ட வகையில் அமைந்துள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக்கை, ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு அரியலூர் மற்றும் சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

படக்குழு:
கதை,திரைக்கதை, வசனம்: பவன் கே
தயாரிப்பு: அஜிஷ் & பவன் கே
இசை: களவானி – 2 மணி அமுதவன்
பாடல்கள்: மணி அமுதவன்
ஒளிப்பதிவு: ஜெ பி மேன்
படத்தொகுப்பு: ஆர் எஸ் சதிஸ் குமார்
கலை இயக்குநர்: கபாலி கதிர்.கே
ஆடை வடிவமைப்பு: பழனி அமாவாசை
நடனம்: மது
சண்டைப்பயிற்சி: பில்லா ஜெகன்
நிர்வாகத் தயாரிப்பு: விக்கி

Latest articles

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...

’விட்ரா மச்சா…’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!

தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும்...

More like this