HomeCinemaபடம் இயக்க வந்து 25 வருடங்களை எட்டிய இயக்குநர் எழில்... கொண்டாட்டத்துக்கு தயாராகும் ‘தேசிங்குராஜா 2'...

படம் இயக்க வந்து 25 வருடங்களை எட்டிய இயக்குநர் எழில்… கொண்டாட்டத்துக்கு தயாராகும் ‘தேசிங்குராஜா 2′ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா!

Published on

விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.எழில். தொடர்ந்து, அஜித் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘ராஜா’, சிவகார்த்திகேயன் நடித்த ‘மனம் கொத்திப் பறவை’, பிரபுதேவா, சரத்குமார் நடித்த ‘பெண்ணின் மனதை தொட்டு’, ஜெயம்ரவி, பாவனா நடித்த ‘தீபாவளி’, விமல் நடித்த ‘தேசிங்குராஜா’, விக்ரம் பிரபு நடித்த ‘வெள்ளகாரதுரை’, விஷ்ணு விஷால் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’, உதயநிதி நடித்த ‘சரவணன் இருக்க பயமேன், கவுதம் கார்த்திக், பார்த்திபன் நடித்த ‘யுத்த சத்தம்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். அத்தனை நடிகளின் ஹிட் லிஸ்டில் இவருக்கு பெரும் பங்குண்டு.

அவர் இப்போது, விமல் நடிக்க ‘தேசிங்குராஜா 2′ படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படபிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. படம் குடும்பங்கள் ஜாலியாக கொண்டாடும் விதத்தில் உருவாகி வரும் கோடை விடுமுறையில் வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில் வருகிற ஜனவரி 29-ம் தேதி ‘துள்ளாத மனமும் துள்ளும்’ வெளியாகி 25 வருடங்களாகிறது. அந்த மகிழ்ச்சியை ‘எழில் 25′ விழாவாகவும், ‘தேசிங்குராஜா 2′ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவாகவும் நடத்த படத்தின் தயாரிப்பாளர் ‘இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ்’ பி.ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளார். நிகழ்ச்சி வரும் 27-ம் தேதி மாலை 6 மணியளவில் சென்னையில் நடக்கவிருக்கிறது.

நிகழ்ச்சியை, எழிலுக்கு முதல் முதலாக இயக்குநர் வாய்ப்பு கொடுத்த ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ ஆர்.பி.செளத்ரி குத்து விளக்கேற்றி துவக்கி வைக்கவிருக்கிறார்.

நிகழ்வில் ‘தேசிங்கு ராஜா 2′ பட நாயகன் விமல்,
முக்கிய கேரக்டரில் நடிக்கும் ஜனா, நாயகிகள் பூஜிதா பொனாடா , ஹர்ஷிதா மற்றும் ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கவிருக்கிறார்கள்.

எழில் இயக்கிய படங்களின் தயாரிப்பாளர்கள், பங்கு பெற்ற கலைஞர்கள் அனைவரும் விழாவில் பங்கு கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

‘தேசிங்கு ராஜா 2′ படக்குழு:
இணை தயாரிப்பு: ஆர்.பாலகுமார்
இசை: வித்யாசாகர்
பாடல்கள்: யுகபாரதி, விவேக்,சுப்ரமணியம்
ஒளிப்பதிவு: செல்வா.ஆர்
எடிட்டிங்: ஆனந்த் லிங்கா குமார்
ஆர்ட்: சிவசங்கர்
வசனம்: முருகன்
ஸ்டண்ட்: ‘ஃபயர்’ கார்த்திக்
நடனம்: தினேஷ்
மக்கள் தொடர்பு: ஜான்சன்

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this