HomeCinemaஅமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் நடித்த ‘கல்கி 2898 AD' மே 9-ம் தேதி...

அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் நடித்த ‘கல்கி 2898 AD’ மே 9-ம் தேதி ரிலீஸ்!

Published on

நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘கல்கி 2898 AD’ வரும் மே மாதம் 9-ம் தேதி வெளியாகிறது. இது புராணக் கதைகளால் ஈர்க்கப்பட்ட எதிர்காலத்தில் நடைபெறும் அறிவியல் புனைவு படைப்பாகும்.

வாரணாசி, மும்பை, டெல்லி, சண்டிகர், சென்னை, மதுரை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், குண்டூர், பீமாவரம், காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல முக்கியத்துவம் வாய்ந்த மாநகரங்களில் ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் பிரம்மாண்டமாக வெளியிட்டனர். இதற்காக விஜயவாடாவில் நடைபெற்ற பிரத்யேக அணிவகுப்பு… பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தது.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனரும், திரைப்பட தயாரிப்பாளருமான சி. அஸ்வினி தத் பட வெளியீடு குறித்து பேசுகையில், ”வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் தனது ஐம்பதாவது ஆண்டை நிறைவு செய்யும் வகையில் எங்களுடைய சினிமா பயணத்தில் மே ஒன்பதாம் தேதியின் முக்கியத்துவம் தெளிவாகத் தெரிகிறது. ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ முதல் விருது பெற்ற ‘மகாநதி’ மற்றும் ‘மகரிஷி’ வரை இந்த தேதி எங்கள் வரலாற்றில் தனி இடத்தை பொறித்துள்ளது. இப்போது அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் போன்ற திறமையான நட்சத்திர கலைஞர்களுடன் தயாரான ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீடு எங்களுக்கு ஒரு சிறப்பான தருணத்தை குறிக்கிறது. எங்கள் நிறுவனத்தின் மைல் கல்லான ஐம்பதாவது ஆண்டுடன் இப்படம் இணைந்துள்ளது. மேலும் நாங்கள் எங்கள் பயணத்தை தொடரும்போது ..அதை இந்த திரைப்படம் மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது” என்றார்

இதனிடையே ‘கல்கி 2898 AD’ கடந்த ஆண்டு சான்- டியாகோவில் உள்ள காமிக்-கானில் அறிமுகம் செய்யும் போது உலகம் முழுவதும் பெரும் அதிர்வை உருவாக்கி, பாராட்டைப் பெற்றது. மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேலும் அவர்களை சூழ்ச்சிகள் நிறைந்த எதிர்கால உலகிற்கு அழைத்துச் செல்லவும் ‘கல்கி 2898 AD’ உறுதியளிக்கிறது.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this