HomeCinemaநவம்பர் 17-ல் ரிலீஸாகும் 'செவ்வாய்கிழமை' ஒரு புதிய டிரெண்டை உருவாக்கும்! -இயக்குநர் அஜய் பூபதி உறுதி

நவம்பர் 17-ல் ரிலீஸாகும் ‘செவ்வாய்கிழமை’ ஒரு புதிய டிரெண்டை உருவாக்கும்! -இயக்குநர் அஜய் பூபதி உறுதி

Published on

அஜய் பூபதி தான் இயக்கி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘ஆர்.எக்ஸ். 100’ படத்திற்குப் பிறகு, ‘செவ்வாய்கிழமை’ என்ற ரஸ்டிக் திரில்லர் படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் பாயல் ராஜ்புத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீதேஜ், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லட்சுமண் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

முத்ரா மீடியா ஒர்க்ஸ் பேனரின் கீழ் சுவாதி ரெட்டி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் நவம்பர் 17ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில் படம் பற்றி இயக்குநரிடம் பேசியபோது, “திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் புதுமையாக இருக்கும். யார் நல்லவர், யார் கெட்டவர் என்ற எளிய கேள்விகளுக்கு கூட எளிதில் பதில்களைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கதாபாத்திரங்களை மையமாக வைத்து நகரும் இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத்தின் கதாபாத்திரம் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும். திரையரங்குகளில் படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் வித்தியாசமான ஆச்சரியத்தை அனுபவிப்பார்கள்” என்றார்.

தயாரிப்பாளர்கள் சுவாதி ரெட்டி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா கூறுகையில், “ஆர்எக்ஸ் 100′ படத்தின் மூலம் அஜய் பூபதி ஒரு புதிய டிரெண்டை உருவாக்கினார். இப்போது இவரது ‘செவ்வாய்கிழமை’ ஒரு புதிய டிரெண்டை உருவாக்கும். வித்தியாசமான படம் இது. இந்தியத் திரையில் இதுவரை பார்த்திராத ஒரு படத்தை இயக்குநர் உருவாக்கியுள்ளார். நவம்பர் 17ஆம் தேதி பார்வையாளர்களும் இதனை உணர்வார்கள். படத்தை 99 நாட்கள் படமாக்கினோம், அதில் 51 நாட்கள் இரவு நேர படப்பிடிப்புகள். இது உயர்தர தொழில்நுட்பம் கொண்ட படம்.

‘காந்தாரா’ படத்தின் இசையமைப்பாளராக பிரபலமான அஜனீஷ் பி லோக்நாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘விக்ரம் வேதா’, ‘காந்தாரா’, ‘விக்ராந்த் ரோனா’, ‘சலார்’ போன்ற படங்களில் பணியாற்றியவரும் ‘ரங்கஸ்தலம்’ படத்திற்காக தேசிய விருதை வென்றவருமான எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன் இந்தப் படத்திற்கு சவுண்ட் டிசைன் செய்துள்ளார். மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம். தற்போது போஸ்ட் புரொடக்‌ஷனில் இருக்கிறோம்” என்றனர்.

படக்குழு:-
கதை, திரைக்கதை, இயக்கம்: அஜய் பூபதி
வசனம்: தாஜுதீன் சையத், ராகவ்
தயாரிப்பு வடிவமைப்பு: ரகு குல்கர்னி
இசை: பி அஜனீஷ் லோக்நாத்
ஒளிப்பதிவாளர்: தாசரதி சிவேந்திரா
ஒலி வடிவமைப்பாளர் & ஆடியோகிராபி: தேசிய விருது பெற்ற ராஜா கிருஷ்ணன்
எடிட்டர்: குலப்பள்ளி மாதவ் குமார்
சண்டைப் பயிற்சி: ரியல் சதீஷ், பிருத்வி
கலை இயக்குநர்: மோகன் தல்லூரி
நிர்வாக தயாரிப்பு: சாய்குமார் யாதவில்லி
ஆடை வடிவமைப்பாளர்: முதாசர் முகமது
டிஜிட்டல் மார்க்கெட்டிங்: டாக் ஸ்கூப்
நடன இயக்குநர்: பானு
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா

Latest articles

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட்...

இந்த படம் நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி! -நாகபந்தம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விராட் கர்ணா 

அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்க புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான...

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக...

இஸ்லாமியர்கள் குறித்த பார்வையை இந்த படம் மாற்றி இருக்கிறது என்பதை பெரும் வெற்றியாக நினைக்கிறேன்! -‘ஹபீபி’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றிக்கு...

More like this