HomeCinemaவித்தியாசமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வேண்டுமென புத்தாண்டில் உறுதியெடுத்துள்ளேன்! -சொல்கிறார் நடிகர் காளிதாஸ் ஜெயராம்

வித்தியாசமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வேண்டுமென புத்தாண்டில் உறுதியெடுத்துள்ளேன்! -சொல்கிறார் நடிகர் காளிதாஸ் ஜெயராம்

Published on

ஒரே மாதிரியான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்காமல் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிற காளிதாஸ் ஜெயராம், இந்த புத்தாண்டிலிருந்து இன்னும் அதிகளவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க இருப்பதாக உறுதியெடுத்திருக்கிறார்.

இதுபற்றி நடிகர் காளிதாஸ் ஜெயராம் கூறும்போது, ”ஒரு நடிகருக்கு சிறந்த வழிகாட்டியாக இயக்குநர்கள் இருப்பார்கள் என்பதை நான் எப்போதும் உறுதியாக நம்புபவன். தற்போது இருக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்கள், அவர்களுக்கு முந்தைய தலைமுறை நடிகர்களும் இந்த விஷயத்தை உறுதியாக கடைப்பிடித்துள்ளனர். அவர்களின் வழியில் நானும் பயணப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சின்ன கதாபாத்திரமோ பெரிய கதாபாத்திரமோ என்னுடைய நடிப்புத் திறமையை மேம்படுத்தும் வகையிலான, கதாபாத்திரங்கள் கொடுத்த திறமையான இயக்குநர்களுடன் இதுவரை பணிபுரிந்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.

சில படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டும்தான் நான் நடித்திருப்பேன். ஆனால், அவை விலைமதிப்பற்ற அனுபவங்களை எனக்கு பரிசளித்தன. எந்தவொரு நடிகரையும் போலவே, நானும் என்னுடைய அடுத்தக் கட்டம் நோக்கி நகர உள்ளேன்.

என்னுடைய நடிப்பை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலான முழு நீள கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க உள்ளேன். இனிமேல், தீவிர முயற்சிகள் தேவைப்படும் கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களை மகிழ்விக்கும் படியான படங்களில் நடிக்க உள்ளேன்.

இந்த புதிய முடிவின் முதல் படியாக, பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்கும் மிகப் பிரபலமான தயாரிப்பு நிறுவனத்தின் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளேன். அந்தத் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும். இதை நான் உற்சாகமாக எதிர்பார்த்துள்ளேன்” என்றார்.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this