HomeCinema‘மில்லியன் ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் ‘சிரோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

‘மில்லியன் ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் ‘சிரோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Published on

‘மில்லியன் ஸ்டுடியோஸ்’ எம்.எஸ்.மன்சூர் தயாரிக்கும் ‘சிரோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

அது குறித்து தயாரிப்பாளர் மன்சூர் கூறும்போது, ​‘‘எங்கள் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 27-ம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. சென்னை, கோவளம், பிச்சாவரம், பாண்டிச்சேரி மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு 45 நாட்கள் நடந்தது. கடந்த டிசம்பர் 10-ம் தேதி படப்பிடிப்பு முடிந்தது. தற்போது, ​​போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை வரும் பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

மலையாளத்தில் ‘பதினெட்டாம் பாடி’, ‘வாலாட்டி’ உள்ளிட்ட பிளாக் பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமான அக்ஷய் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

கமர்ஷியல் பைலட்டான பிரார்த்தனா சாப்ரியா கதாநாயகியாக நடிக்க ரோகிணி, ‘போர்தொழில்’ லிஷா சின்னு, ‘சூப்பர் டீலக்ஸ்’ நோபல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விளம்பரப்பட இயக்குநர் விவேக் ராஜாராம் இந்த படம் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். படம் பேண்டசி ஜானரில் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடன் உருவாகியுள்ளது.

இந்த படத்திற்கு அஸ்வின் ஆர்யன் இசையமைத்துள்ளார். ‘தனி ஒருவன்’, ‘வழக்கு எண் 18/9′, ‘தில்லுக்கு துட்டு’ படங்களின் எடிட்டர் கோபி கிருஷ்ணா எடிட்டிங் பணிகளைக் கவனித்துள்ளார்.

Latest articles

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...

’விட்ரா மச்சா…’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!

தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும்...

More like this