HomeGeneralவடிவுடையான் இயக்கத்தில் தமிழ் உட்பட 12 மொழிகளில் உருவாகும் 'காக்கி முருகன்' திரைப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள்...

வடிவுடையான் இயக்கத்தில் தமிழ் உட்பட 12 மொழிகளில் உருவாகும் ‘காக்கி முருகன்’ திரைப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உலகெங்கும் வெளியிடுகிறது!

Published on

விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தை தயாரித்த நிறுவனம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ். நூறு படங்களை தயாரித்து, 150 படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்த நிறுவனம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் ” காக்கி முருகன் ” திரைப்படத்தை உலகெங்கும் வெளியிடுகிறது.
“காக்கி முருகன்” திரைப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.
ஸ்ரீ வடிவுடையான் ஸ்டூடியோஸ் பட நிறுவனம் சார்பில், பிரபல இயக்குநர் வடிவுடையான் தன் சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசை அமைத்து தயாரித்து இயக்கும் புதிய பிரம்மாண்ட திரைப்படம் தான் “காக்கி முருகன்”.
தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தொடாத அதிரடி திரில்லரும் மர்ம முடிச்சுக்களும் நிறைந்த ஒரு அனிமல் ஓரியண்ட் திரைப்படம் (Animal-Oriented Movie)ஒரு முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரிக்கும், உலகெங்கும் தடை செய்யப்பட்ட வெறிபிடித்த ஐந்து ‌ பிட்புல் (Pitbull) நாய்களுக்கும், முருகக் கடவுளுக்குமான மர்ம முடிச்சுகளால் பின்னப்பட்ட கதைக்களம். ஹாலிவுட் படங்களுக்கு நிகரான அசாத்திய தொழில்நுட்ப நேர்த்தியுடன் இந்திய சினிமாவே இதுவரை பார்த்திராத ஒரு புதிய உச்சமாக, ஆடியன்ஸை சீட்டு நுனிக்கு கொண்டு செல்லும் அளவில் உலகெங்கும் தடை செய்யப்பட்ட ஐந்து பிட்புல் நாய்களை மையப்படுத்தி மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கபட்ட கதைக்களம். திரையரங்குகளில் ரசிகர்களை மிரள வைக்கும் உலகத்தரம் வாய்ந்த விஷுவல் விருந்தாக இருக்கும்.
இந்தியத் திரையுலகை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் முயற்சியாக, இத்திரைப்படம் தமிழ் மட்டுமின்றி உலகின் முன்னணி 12 மொழிகளில் உலகெங்கும் ஒரே நேரத்தில் வெளியிட தமிழ் திரையுலகின் முன்னணி பட நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் “காக்கி முருகன்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. இந்த உலகளாவிய விநியோகத்தைகையில் எடுத்திருப்பதன் மூலம், “காக்கி முருகன்” உலகெங்கும் தியேட்டர்களில் மிக பிரம்மாண்டமாகக் களம் காணுவது உறுதியாகியுள்ளது.
இப்படத்தில் விஜய்சத்யா போலீஸ் அதிகாரியாக அதிரடி நாயகனாக வருகிறார். அவருக்கு இணையாக முன்னணி திரை நட்சத்திரம் ரித்திகா சென் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் திரையுலகின் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் இணைவதை அடுத்தடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர் திரைப்பட குழுவினர்.
இந்தத் திரைப்படத்தில் மையக் கருவாக நடிக்கும் ஐந்து ராட்சச பிட்புல் நாய்களுக்கு சர்வதேச தரத்திலான சிறப்புப் பயிற்சிகள் தற்போது கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆர். பிரணவ் ஒளிப்பதிவையும், சண்முகம் கலையையும், யுகபாரதி பாடல்களையும், ஓம் பிரகாஷ் சண்டை பயிற்சியையும் பிஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பையும், தினேஷ் நடன பயிற்சியையும்,
ஜி.சங்கர் தயாரிப்பு மேற்பார்வையையும், நா.விஜயமுரளி மக்கள் தொடர்பையும், வி. உமாராணி இணை தயாரிப்பையும் கவனிக்கின்றனர்.
பொட்டு அம்மன், தம்பி வெட்டோத்தி சுந்தரம், பாம்பாட்டம் முதலான வெற்றிப் படங்களை இயக்கிய வடிவுடையான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து, மிகுந்த பொருட்செலவில் தயாரித்து டைரக்ட் செய்கிறார்.
இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பாக வைரலாகி வருகிறது.

Latest articles

பிரபல இயக்குனர்கள் வெளியிட்ட THE RAW படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்!

GVKM Elephant Pictures பட நிறுவனம் சார்பில் டத்தோ கணேஷ் மோகனசுந்தரம், 2M சினிமாஸ் பட நிறுவனம் சார்பில்...

கார்த்திகேயன் சந்தானம், லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் கூட்டணியில் உருவாகும் ‘மேயாத மான் 2’ படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது!

வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் கூட்டணியில் இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மேயாத மான்'....

பசில் ஜோசப்- எல் கே அக்ஷய்குமார் இணைந்து மிரட்டும் ‘ராவடி’ படத்தின் குஜிலி மஸ்து இரண்டாம் பாடல் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=5Je6-r92hNg தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான பேசில் ஜோசப் - 'சிறை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட்...

IFFI விழாவில் திரையிடப்பட்ட ‘கூடு’  திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு

கோவா : சில திரைப்படங்கள் பாராட்டுகளைப் பெறுகின்றன. ஆனால் சில திரைப்படங்கள் ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகவே மாறுகின்றன. அறிமுக...

More like this

பிரபல இயக்குனர்கள் வெளியிட்ட THE RAW படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்!

GVKM Elephant Pictures பட நிறுவனம் சார்பில் டத்தோ கணேஷ் மோகனசுந்தரம், 2M சினிமாஸ் பட நிறுவனம் சார்பில்...

கார்த்திகேயன் சந்தானம், லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் கூட்டணியில் உருவாகும் ‘மேயாத மான் 2’ படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது!

வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் கூட்டணியில் இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மேயாத மான்'....

பசில் ஜோசப்- எல் கே அக்ஷய்குமார் இணைந்து மிரட்டும் ‘ராவடி’ படத்தின் குஜிலி மஸ்து இரண்டாம் பாடல் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=5Je6-r92hNg தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான பேசில் ஜோசப் - 'சிறை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட்...