HomeMovie Reviewசெய் செய்யாதே சினிமா விமர்சனம்

செய் செய்யாதே சினிமா விமர்சனம்

Published on

‘ரமணா’ காலத்திலிருந்து இன்று வரை மருத்துவத் துறையில் நடக்கும் அநியாய அக்கிரமங்களை எடுத்துக்காட்டும் படங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. அந்த வரிசையில் ஒன்றாக வந்திருக்கிற இந்த படத்தின் இயக்குநர் நிஜத்தில் மருத்துவர். அதனால் காட்சிகளில் டீடெய்ல்ஸ் அதிகமிருக்கிறது.

சில ஊர்களில் 5 ரூபாய் டாக்டர், 10 ரூபாய் டாக்டர் என்றிருப்பார்கள். ஃபீஸ் குறைவாகவும் மருத்துவம் நிறைவாகவும் இருக்கும். அப்படிப்பட்ட டாக்டர்களை மனித வடிவிலிருக்கிற கடவுளாக மதிப்பார்கள். அவர்கள் இறந்துவிட்டால் மக்கள் தங்கள் குடும்பத்தில் உயிருக்குயிரான ஒருவரை இழந்து விட்டது போல் கலங்கி நிற்பார்கள். மிக சமீபத்தில்கூட அப்படியொரு சம்பவம் நடந்தது.

அதேபோன்ற தங்கமான மருத்துவராக, அரசு மருத்துவமனையின் டீனாக இருக்கிறார் சந்திரபோஸ். அவரது நேர்மையால், எளிமையான வைத்தியத்தில் குணப்படுத்த முடியுமென்றால் அதை தாண்டி யோசிக்காத மருத்துவப் பணியால் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வலம் வருகிறார்.

தனியார் மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பு வகிக்கிற அவரது மகன், சிறு தலைவலிக்கு கூட ஆபரேஷன் செய்து கல்லா கட்டத் துடிக்கிறார்.

இப்படி எதிரெதிர் துருவங்களாக இருக்கிற அப்பாவால் மகனுக்கும், மகனால் அப்பாவுக்கும் வருகிற பிரச்சனைகளும் தீர்வுகளுமாக கடந்தோடுகிறது ‘செய் செய்யாதே.’

மருத்துவர் சந்திரபோஸாக டாக்டர் எஸ் ராஜா. மருத்துவப் பணியை எப்படியெல்லாம் நேர்மையாக செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது அவரது பங்களிப்பு. மருத்துவப் பணியை எப்படியெல்லாம் செய்யக்கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்கிறது அவரது மகனாக வருகிற குரு விஜய்யின் செயல்பாடுகள்.

எஸ் ராஜாவிலிருந்து அவரது மகனாக, மனைவி, மகளாக, மருத்துவ மோசடியில் ஈடுபடுகிற தொழிலதிபர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட எல்லோருமே அறிமுக நடிகர்கள். கதையின் போக்கில் கலந்திருக்கிறார்கள்.

மருத்துவத் துறையில் நடக்கும் தவறுகளை அடக்கியொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிற முதலமைச்சராக வந்து போகிறார் பா ஜ க’வின் எச் ராஜா.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மட்டுமல்லாமல் பெரிதாய் குறை சொல்ல முடியாத அளவுக்கு பின்னணி இசையையும் தந்திருக்கிறார் எஸ் ராஜா. ஒளிப்பதிவு சிறிய பட்ஜெட்டில் அடங்கியதாக தெரிகிறது.

மெடிக்கல் மாஃபியாக்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை விரிவாக காண்பிக்கும் காட்சிகளில் ஒன்றாக லஞ்சம் கைமாறுகிறது – எப்படியெல்லாம் பல மடங்காக உயர்கிறது என்பதை விவரித்திருப்பது சுவாரஸ்யம்.

நடிகர் நடிகைகளின் சுமாரான நடிப்பு, கமர்சியல் அம்சங்கள் அவ்வளவாக இல்லாதது, எந்த வியாதிக்கு என்ன மருத்துவம் என்ற அதிகப்படியான எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாத விளக்கங்கள் என சிலபல குறைகள் இருந்தாலும், படம் எடுக்கப்பட்ட நோக்கம் உயர்வாக இருக்கிறது. அதற்காகவே இயக்குநரை பாராட்டலாம்.

Rating 3 / 5

Latest articles

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

4DX, RealD 3D, ScreenX, டால்பே மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையரங்கத் தொழில்நுட்பங்களில்,...

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பு, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் வெற்றிக்காக வேல்ஸ் நிறுவனம் சார்பில் சிறப்பு வழிபாடு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி’...

ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங்’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே.’

தனது பிறந்தநாளில் ஷாருக்கான், வரவிருக்கும் 'கிங் - KING' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தூ மில் ஜாயே - Tu...

More like this