HomeGeneralசிலிர்ப்பூட்டும் இசையில் வில்லுப்பாட்டு மாதவி குரலில் 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ...

சிலிர்ப்பூட்டும் இசையில் வில்லுப்பாட்டு மாதவி குரலில் ‘வேட்ட சாமி’ படத்தின் ‘சாமி அழைப்பு’ லிரிக்கல் வீடியோ வெளியானது!

Published on

தென் தமிழகத்தின் திருவிழாக்களையும் மக்களின் பண்பாட்டையும் தன் காந்தக் குரலினாலும் வில்லுப்பாட்டு இசையினாலும் கட்டிப்போட்ட கிராமத்துக் கலைஞர் மாதவி, முதன்முறையாகத் திரைத்துறையில் பின்னணிப் பாடகியாக அடியெடுத்து வைத்துள்ளார்.
‘பம்பர்’ படப்புகழ் எம். செல்வக்குமார் இயக்கத்தில், அருள்நிதி மற்றும் அமீர் இணைந்து நடிக்கும் ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘சாமி அழைப்பு’ லிரிக்கல் வீடியோ (அக்டோபர் 30) வெளியாகி, பக்தியையும் கிராமத்து உணர்வுகளையும் நேசிக்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
வில்லுப்பாட்டு கலையின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களின் அன்பு பெற்ற வில்லிசைக் கலைஞர் மாதவி, முதன்முறையாகச் சினிமாவில் பாடியுள்ள இந்த ஆன்மீகப் பாடல், கிராமத்துக் கோவில் திருவிழாவின் மெய்சிலிர்க்க வைக்கும் தெய்வீக அதிர்வை அப்படியே உங்கள் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும்!
இசையமைப்பாளர் ஜிப்ரானின் பாரம்பரியமிக்க நாட்டுப்புற இசையில் உருவாகியுள்ள 7 பாடல்களில், இந்தப் பாடல் திருவிழா மேளதாளங்கள் மற்றும் தெய்வ வழிபாட்டின் உச்சக்கட்ட அனுபவத்தைத் தருகிறது. ‘தாய் கிழவி’, ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்கள் மூலம் கவனம்பெற்ற பாடலாசிரியர் மு.ஜெகன் கவிராஜ், ‘வீரம் பாயும் நெல்லையிலே…’ எனத் தொடங்கும் இந்தப் பாடலின் கம்பீரமான வரிகளை எழுதியுள்ளார்.
7 MILES PER SECOND Productions சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கும் இத்திரைப்படத்தில் அருள்நிதி – அமீர் கூட்டணியுடன் இயக்குநர் தமிழ், விஜி சந்திரசேகர், ‘ஆடுகளம்’ நரேன், அர்ஜெய், OAK சுந்தர், மதுசூதனன், மைனா நந்தினி, கவிதா பாரதி மற்றும் நந்தினி எனப் பலரும் நடித்துள்ளனர்.
-ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு & ரூபனின் படத்தொகுப்புடன் தென் தமிழகத்தின் பண்பாடு, வீரம் மற்றும் ஆழமான தெய்வ நம்பிக்கையை அச்சு அசலாகக் காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு. பாடல்களின் உரிமையை PRIME9 MUSIC நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் டிசம்பர் மாதம் ‘வேட்ட சாமி’ திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஊர் திருவிழாவின் அசல் பரவசத்தையும், வில்லிசை மாதவியின் கம்பீரமான குரலையும் முதன்முறையாகத் திரையில் அனுபவிக்கத் தயாராகுங்கள்!

Latest articles

நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

நமித் மல்ஹோத்ராவின் பிரம்மாண்ட படைப்பான ‘ராமயணா’ திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்டத் திரையிடலை லாஸ் ஏஞ்சல்ஸில் பார்த்ததன் மூலம், ராக்கிங்...

இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100 நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன் ‘எல்லம்மா’ படத்தின் டைட்டில் பாடலைப் பதிவு செய்த ராக்ஸ்டார் டிஎஸ்பி!

‘பலாகம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த வேணு எல்தண்டி இயக்கத்தில், தில் ராஜு வழங்க, சிரிஷ் தயாரிப்பில், இசையமைப்பாளர்...

உற்சாகத்துடன் நடந்த ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் சித்து – தர்ஷிகா நடிக்கும் ‘தி லாஸ்ட் கேஸ்’ திரைப்படத்தின் தொடக்க விழா!

அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் 'தி டார்க் ஹெவன் ' ....

சிங்காரம் சினிமா விமர்சனம்

1990 காலகட்டத்தில் நடக்கிற கதை. நாயகன் யோகிபாபு நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரது அப்பா, அம்மா, சகோதரிகள், சொந்த பந்தம்...

More like this