HomeGeneralஎனது திரைப்பயணத்தில் ‘சைக்கிள் கேப்’ மிக முக்கியமான திரைப்படம் -நடிகை ஷெர்ரி அகர்வால்

எனது திரைப்பயணத்தில் ‘சைக்கிள் கேப்’ மிக முக்கியமான திரைப்படம் -நடிகை ஷெர்ரி அகர்வால்

Published on

தெலுங்கு, பஞ்சாபி, இந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது தமிழ்த் திரையுலகிலும் ’சைக்கிள் கேப்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார் நடிகை ஷெர்ரி அகர்வால். 1990களின் காதலில் இருந்த அப்பாவித்தனத்தையும் பழைய நினைவுகளையும் இன்றைய தலைமுறையின் உணர்வுகளோடும் ரசனைகளோடும் இணைக்கும் உணர்வுப்பூர்வமான மியூசிக்கல் காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘சைக்கிள் கேப்.’
இசை, காதல் மற்றும் அனைவருக்கும் நெருக்கமான மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், இரண்டு தலைமுறைகளின் காதல் உணர்வுகளையும் ஒரே கதையில் இணைக்க முயல்கிறது. கடந்த காலத்தின் இனிமையான நினைவுகளை மீட்டெடுக்கும் அதேவேளையில், இன்றைய தலைமுறை ரசிகர்களுடனும் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. ட்யூப்லைட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள இப்படத்தில், தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸுடன் இணைந்து ஷெர்ரி அகர்வால் நடித்துள்ளார்.
‘சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து ஷெர்ரி அகர்வால் பகிர்ந்து கொண்டதாவது, “ஒரு நடிகையாக, ‘சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது. படப்பிடிப்பு முழுவதும் பாசிட்டிவாக இருந்ததுடன் படக்குழுவினர் அனைவரும் இனிமையாக பழகினர். பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவும் மாற்றியது. இவர்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.
ட்யூப்லைட் புரொடக்‌ஷன்ஸ், தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸ், இயக்குநர் எம்.ஆர். பாரதி சார், ஒளிப்பதிவாளர் சாலமன் சார், ஹேமந்த் செல்வராஜ் சார், எக்ஸிகியூடிவ் புரொடியூசர் சுஜா சூர்ய நிலா மற்றும் ‘சைக்கிள் கேப்’ படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயம் பார்வையாளர்களுக்கும் பிடித்த படமாக இது இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.
தெலுங்கில் ‘ஏப்ரல் 28த் எம் ஜரிகிந்தி?’, ‘ராம் அசுர்’, ‘ஐ ஹேட் யூ’ ஆகிய திரைப்படங்களிலும் ஷெர்ரி அகர்வால் நடித்துள்ளார். டீசர் வெளியாகியுள்ள ‘எந்தவாருகானி’ என்ற வரவிருக்கும் தெலுங்குப் படத்திலும், ‘ஆகர்ஷிதா’ என்ற கன்னடப் படத்திலும், ‘கௌஷிகி’, ‘ஐபிஎஸ் துபே’ ஆகிய இந்திப் படங்களிலும், ‘பெனாமி’ என்ற தெலுங்குப் படத்திலும் அவர் நடித்துள்ளார்.
திரைப்படங்கள் மட்டுமல்லாது, சௌபால் தளத்தில் வெளியிடப்பட்டு யூடியூப்பிலும் காணக்கிடைக்கும் பஞ்சாபி இணையத் தொடரான ‘ரேஞ்ச்’ தொடரிலும் நடித்துள்ளார். இதுதவிர, டி-சீரிஸ், ஜீ மியூசிக் மற்றும் ரெட் ரிப்பன் மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளில் உருவான பஞ்சாபி மற்றும் இந்தி இசை வீடியோக்களிலும் அவர் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தான் அறிமுகமாகும் ‘சைக்கிள் கேப்’ தனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் என்கிறார் ஷெர்ரி அகர்வால். இசை, காதல் மற்றும் 1990களின் காதலில் நிறைந்திருந்த அப்பாவித்தனம் ஆகியவற்றின் கலவையாக உருவாகியுள்ள இப்படம், பல தலைமுறை ரசிகர்களின் மனங்களிலும் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest articles

‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார் இயக்குநர் சசிகுமார்!

‘எங்கேயும் எப்போதும்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘எங்க காட்டுல மழை’, ‘சிக்கிக்கு சிக்கிகுச்சு’, ‘காக்ட்டைல்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக...

பனி விழும் இரவு சினிமா விமர்சனம்

கொடைக்கானலுக்கு தன்னுடன் வந்த, தான் திருமணம் செய்துகொள்ளப் போகிற பெண்ணைக் காணவில்லை என போலீஸில் புகார் கொடுக்கிறான் நாயகன்...

Kauvery Hospital Treats Complex Aortic Valve Regurgitation Using Specialised HANCHOR Valve Technology!

Procedure addresses severe heart valve leakage caused by a perforated leaflet in a patient...

“அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை.” -கீர்த்தி சுரேஷ்!

நெட்ஃபிளிக்ஸின் ‘அக்கா’ தொடரில் பவானியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். விசுவாசத்தால் கட்டமைக்கப்பட்ட ஒரு அரசாட்சி. தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்படும்...

More like this

‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார் இயக்குநர் சசிகுமார்!

‘எங்கேயும் எப்போதும்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘எங்க காட்டுல மழை’, ‘சிக்கிக்கு சிக்கிகுச்சு’, ‘காக்ட்டைல்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக...

பனி விழும் இரவு சினிமா விமர்சனம்

கொடைக்கானலுக்கு தன்னுடன் வந்த, தான் திருமணம் செய்துகொள்ளப் போகிற பெண்ணைக் காணவில்லை என போலீஸில் புகார் கொடுக்கிறான் நாயகன்...

Kauvery Hospital Treats Complex Aortic Valve Regurgitation Using Specialised HANCHOR Valve Technology!

Procedure addresses severe heart valve leakage caused by a perforated leaflet in a patient...