HomeCinemaபனி விழும் இரவு சினிமா விமர்சனம்

பனி விழும் இரவு சினிமா விமர்சனம்

Published on

கொடைக்கானலுக்கு தன்னுடன் வந்த, தான் திருமணம் செய்துகொள்ளப் போகிற பெண்ணைக் காணவில்லை என போலீஸில் புகார் கொடுக்கிறான் நாயகன் ஜேகே. எப்போது வந்தீர்கள், எதற்காக வந்தீர்கள், என்ன நடந்தது என போலீஸ் விசாரிக்க விசாரிக்க தானும் அந்த பெண்ணும் வந்து தங்கிய வீட்டுக்குள் பயங்கர அமானுஷ்ய சம்பவங்கள் நடந்ததாய் சொல்கிறான்.
அவன் சொல்வதை வைத்துப் பார்த்தால் அந்த வீட்டில் யாரேனும் கொலை செய்யப்பட்டிருக்கலாம், ஜே கே சந்தித்த அமானுஷ்ய சம்பவங்களுக்கு அந்த ஆத்மா காரணமாக இருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது.
அந்த வீட்டின் வாட்ச்மேன், பால்காரர் என சிலரை விசாரித்தால் அவர்கள் சொல்வதற்கும் ஜே கே சொல்வதற்கும் சம்பந்தமில்லாமலிருக்கிறது.
உண்மையில் என்னதான் நடந்தது? காணாமல் போன பெண்ணுக்கு என்னவானது?
சஸ்பென்ஸுக்கு மேல் சஸ்பென்ஸ் வைத்து கதையை நகர்த்தி, யூகிக்க முடியாத கிளைமாக்ஸை பரிமாறுகிறார் இயக்குநர் செ. ரா. ராஜேஷ்.
நாயகன் அருண் கார்த்தி. அமானுஷ்ய சம்பவங்களைக் கண்டு பயந்து மிரள்வது, காதலியைக் காணாத அதிர்ச்சியில் அழுது புலம்புவது என எளிமையாக நடித்திருக்கிறார்.
ஒல்லி  உடம்பும் குழந்தைத்தனமான முகமுமாக நாயகி எனாக்ஷி கங்குலி. அழகாக புன்னகைத்து, நடிப்புப் பங்களிப்பை சிம்பிளாக செய்திருக்கிறார்.
போலீஸ் உயரதிகாரியாக வில்லத்தனம் ஏதுமின்றி கடமையாற்றியிருக்கிறார் சேரன்ராஜ். சாதாரண கான்ஸ்டபிள்தான் என்றாலும் நாயகி காணாமல் போன விஷயத்தில் போலீஸ் உயரதிகாரி லெவலுக்கு களமிறங்கி துப்பு துலக்கி உண்மையை கண்டறிபவராக கவனம் பெறுகிறார் கருப்பு நம்பியார்.
சின்னச் சின்ன தில்லுமுல்லு செய்து பெரிய குற்றவாளிபோல் போலீஸில் சிக்குகிற சரவண சக்தி லேசாக சிரிப்பூட்டுகிறார். மற்றவர்கள் போதுமான அளவில் நடித்திருக்க, கொடைக்கானலின் அழகை கூடுதல் அழகாக்கிக் காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார் தங்கவேல். சதா முருகனின் பின்னணி இசை இன்னும் கொஞ்சம் அதிரடியாக இருந்திருக்கலாம்.
திகிலூட்டும் சம்பவங்களின் பின்னணியில் இன்றைக்கு உலகை ஆட்டிப்படைக்கிற, அச்சுறுத்துகிற அறிவியல் தொழில்நுட்பத்தை இழுத்துப் போட்டிருப்பதால் கதை பலமாகியிருக்கிறது. திகில் திரில்லர் விரும்பிகள் பெரிய எதிர்பார்ப்பில்லாமல் போனால் திருப்தியாய் திரும்பலாம்.
Rating 3 / 5

Latest articles

‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார் இயக்குநர் சசிகுமார்!

‘எங்கேயும் எப்போதும்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘எங்க காட்டுல மழை’, ‘சிக்கிக்கு சிக்கிகுச்சு’, ‘காக்ட்டைல்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக...

எனது திரைப்பயணத்தில் ‘சைக்கிள் கேப்’ மிக முக்கியமான திரைப்படம் -நடிகை ஷெர்ரி அகர்வால்

தெலுங்கு, பஞ்சாபி, இந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது தமிழ்த் திரையுலகிலும் ’சைக்கிள் கேப்’ திரைப்படம்...

Kauvery Hospital Treats Complex Aortic Valve Regurgitation Using Specialised HANCHOR Valve Technology!

Procedure addresses severe heart valve leakage caused by a perforated leaflet in a patient...

“அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை.” -கீர்த்தி சுரேஷ்!

நெட்ஃபிளிக்ஸின் ‘அக்கா’ தொடரில் பவானியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். விசுவாசத்தால் கட்டமைக்கப்பட்ட ஒரு அரசாட்சி. தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்படும்...

More like this